ஆர். பன்னீர்செல்வம் இயக்கத்தில் 'நான்தான் சிவா'

ஆர். பன்னீர்செல்வம் இயக்கத்தில் 'நான்தான் சிவா'

1 mins read
e665d0b9-8ad2-4386-85db-0467fcd298e2
'நான்தான் சிவா' படத்தில் வினோத், அர்ஷிதா ஷெட்டி. -

'ரேனிகுண்டா' மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைத் தன் பக்கம் திரும்ப வைத்தவர் இயக்குநர் ஆர். பன்னீர்செல்வம்.

அதையடுத்து '18 வயசு', விஜய் சேதுபதியின் 'கருப்பன்' உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.

இந்நிலையில் இவரது இயக்கத்தில் அடுத்து உருவாகி வருகிறது 'நான்தான் சிவா'. இதை இயக்குநர் லிங்குசாமி தயாரிக்கிறார்.

வினோத் என்ற புதுமுகத்தை அறிமுகப்படுத்துகின்றனர். அவருக்கு ஜோடியாக 'உதயம் NH4' அர்ஷிதா ஷெட்டி நடித்துள்ளார். மேலும் பிரசாந்த் நாராயணன், அழகம்பெருமாள், சுஜாதா, விஷாலினி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

இது தன் வாழ்க்கைப் பயணத்தில் தாம் சந்திக்கும் இரு நபர்களால் ஓர் இளைஞன் எவ்வாறு பாதிக்கப்படுகிறான் என்பதை விவரிக்கும் படமாம்.

"எதிர்­பா­ராத வகை­யில் குறிப்­பிட்ட இரு­வ­ரை­யும் சந்­திக்­கி­றான் நாய­கன். அவர்­கள் இரு­வ­ரும் அவ­னுக்கு வாழ்க்­கையை வெவ்­வேறு வகை­யில் சித­ற­டிக்­கி­றார்­கள். அதி­லி­ருந்து அவன் எப்­படி மீண்டு வரு­கி­றான் என்­ப­து­தான் கதை­யின் மையக்­கரு.

"இதில் காதல், அதி­ரடி, நகைச்­சுவை என இதர வணிக அம்­சங்­களும் நிறைந்­தி­ருக்­கும். கும்­ப­கோ­ணம், திருச்சி உள்­ளிட்ட பகு­தி­களில் படப்­பி­டிப்பை நடத்­தி­ உள்ளோம்.

"அறி­முக நாய­கன் என்று சொல்ல முடி­யாத வகை­யில் நிறைவான நடிப்பை வழங்­கி­ உள்ளார் வினோத். லிங்­கு­சா­மி­யின் திருப்­பதி பிர­தர்ஸ் நிறு­வ­னம் தயா­ரிக்­கும் படம் என்­றால் ரசி­கர்­கள் மத்­தி­யில் எப்­போ­துமே தனி எதிர்­பார்ப்­பும் வர­வேற்­பும் இருக்­கும்.

"இந்­தப் படம் உங்­கள் எதிர்­பார்ப்­பைப் பூர்த்தி செய்­யும்," என்கிறார் பன்­னீர்­செல்­வம்.