ராஷ்மிகா கடும் உழைப்பாளி: பாராட்டு தெரிவித்த சமந்தா

ராஷ்மிகா கடும் உழைப்பாளி: பாராட்டு தெரிவித்த சமந்தா

1 mins read
ea02d053-74c4-4a80-ac9e-990ad8fea049
நடிகைகள் சமந்தா (இடது), ராஷ்மிகா மந்தனா. -

நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்து சமந்தா தெரிவித்த கருத்தை அடுத்து ரசிகர்கள் அவரைப் பாராட்டி உள்ளனர்.

அண்மையில் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது ஒரு ரசிகர், 'ராஷ்மிகா மந்தனாவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று கேட்க, அதற்கு 'அவர் கடும் உழைப்பாளி என்று தெரிகிறது. குறிப்பாக அவரது அந்த நடன அசைவுகள் அருமை' என்று பாராட்டினார் சமந்தா.

இது குறித்து அறிந்த ராஷ்மிகா உடனடியாக நன்றி தெரிவித்ததுடன், பாசத்துடன் கட்டியணைக்கும் சித்திரம் ஒன்றையும் சமந்தாவின் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்தார்.

இருவரது இந்த பண்பான, அன்பான அணுகுமுறையை ரசிகர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.