சாதிக்க வரும் ‘மாஸ்டர்’

எப்­போ­துமே தமி­ழ­கத்­தில் கோடைக்­கா­லம் என்­றால் ஒட்­டு­மொத்த கோலி­வுட் வட்­டா­ரத்­தி­லும் கொண்­டாட்­ட­மாக இருக்­கும். எங்கு திரும்­பி­னா­லும் திரு­வி­ழாக் காட்­சி­தான்.

புதுப்­ப­டங்­கள் வெளி­யீடு, குறிப்­பாக உச்ச நட்­சத்­தி­ரங்­க­ளின் படங்­கள் வெளி­யா­கும் நேரம் என்­ப­தால் திரை­ய­ரங்­கு­களில் கூட்­டம் அலை­மோ­தும். படங்­க­ளின் வசூல் எகி­றும்.

அதே­போல் கோடைக்­கால வெற்­றிக்­குப் பிறகு உச்ச நட்­சத்­தி­ரங்­க­ளின் சம்­ப­ள­மும் ராக்­கெட் வேகத்தில் அதி­க­ரிக்­கும். ஆனால் இந்­த ஆண்டு இக்காட்­சி­கள் எதை­யும் பார்க்க முடி­ய­வில்லை.

ஊர­டங்­கால் திரை­யு­ல­க­மும் திரை­ய­ரங்­கு­களும் முடங்­கிக் கிடக்­கின்­றன. ஊர­டங்கு முடி­வ­டை­யும்­போது திரை­ய­ரங்­கு­கள் இயங்­கும் என்­றா­லும், இன்­றைய தேதி வரை சுமார் 90 படங்­கள் வெளி­யீடு காண காத்­தி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஏற்­கெ­னவே தமி­ழ­கத்­தில் திரை­ய­ரங்­கு­க­ளின் எண்­ணிக்கை குறைந்­துள்ள நிலை­யில் இத்­த­னைப் படங்­க­ளை­யும் வெளி­யிட எத்­த­னைக் காலம் ஆகும் என்­பது தெரி­ய­வில்லை. இத்­த­கைய சூழ்­நி­லை­யில் திரை­ய­ரங்க உரி­மை­யா­ளர்­க­ளின் முழுக் கவ­ன­மும் விஜய் நடித்­துள்ள ‘மாஸ்­டர்’ படத்­தின் மீது­தான் பதிந்­துள்­ளது.

துவண்டு போயுள்ள தொழிலை ‘மாஸ்­டர்’ போன்ற பெரிய, பிரம்மாண்டமான படத்­தால்­தான் தூக்கி நிறுத்த முடி­யும் என அவர்கள் கரு­து­கின்­ற­ன­ராம்.

மேலும் விஜய் போன்ற நடி­க­ரால்­தான் மீண்­டும் ரசி­கர்­களை, பொது­மக்­களைத் திரை­ய­ரங்­கு­கள் பக்­கம் இழுக்க முடி­யும் என்­றும் கூறு­கி­றார்­கள்.

இந்­நி­லை­யில் ‘மாஸ்­டர்’ படத்­தின் வெளி­யீடு குறித்து பல­வி­த­மான தக­வல்­கள் வெளி­யான வண்­ணம் உள்­ளன.

தமி­ழ­கத் திரை­ய­ரங்க உரி­மை­யா­ளர்­கள் சங்­கத் தலை­வ­ரான திருப்­பூர் சுப்­பி­ர­ம­ணி­யம் கூறு­கை­யில், சங்க உறுப்­பி­னர்­கள் அத்­தனை பேருமே ‘மாஸ்­டர்’ படத்­தைத்­தான் முத­லில் திரை­யிட விரும்­பு­வ­தா­கக் குறிப்­பி­டு­கின்­ற­னர்.

“பெரும் பொருட்­செ­ல­வில் உரு­வா­கி­யுள்ள, பெரிய நடி­கர்­கள் நடித்த படங்­களில் நிச்­ச­யம் ‘மாஸ்­டர்’ படத்­துக்­குத்­தான் முன்­னு­ரிமை அளிக்கமுடி­யும். தவிர, அந்­தப் படம்­தான் வெளி­யீடு காணத் தயார் நிலை­யில் உள்­ளது. எனவே அதன் தயா­ரிப்­புத் தரப்­பி­டம் பேசி வரு­கி­றோம்.

“திரை­ய­ரங்­கு­கள் திறக்­கப்­ப­டும்­போது அனைத்­தை­யும் பேசி முடிவு செய்­ய­லாம் என்று கூறி­யி­ருக்­கி­றார்­கள். நாங்­களும் காத்­தி­ருக்­கி­றோம்,” என்­கிறார் திருப்­பூர் சுப்­பி­ர­ம­ணி­யம்.

இந்­தி­யா­வில் எந்த மாநி­லத்­தி­லும் இது­வரை திரை­ய­ரங்­கு­கள் மீண்­டும் திறக்­கப்­ப­ட­வில்லை. ஒரு­சில மாநி­லங்­களில் குறைந்த அள­வி­லா­வது திரை­ய­ரங்­கு­கள் திறக்­கப்­பட்­டால்தான் தமி­ழ­க அரசும் திரையரங்குகளை திறக்க முன்வரும் என்கிறார் திருப்­பூர் சுப்­பி­ர­ம­ணி­யம்.

இந்­நி­லை­யில் திரை­ய­ரங்­கு­கள் மீண்­டும் திறக்­கப்­பட்­டா­லும் வேறு­சில பிரச்­சி­னை­கள் இருப்­ப­தாக அதன் உரி­மை­யா­ளர்­கள் சிலர் சுட்­டிக்­காட்­டு­கின்றனர்.

“படம் பார்க்க வரும் அனை­வ­ரது உடல் வெப்­ப­நி­லை­யைப் பரி­சோ­திக்க வேண்­டும், தனி­யாக வரு­ப­வர்­க­ளுக்கு அருகே உள்ள இருக்­கையை காலி­யாக வைத்­தி­ருக்க வேண்­டும். திரை­ய­ரங்க உண­வ­கத்­தில் பணி­யாற்­று­ப­வர்­கள் அனைத்து சுகா­தார விதி­மு­றை­க­ளை­யும் பின்­பற்­று­வதை உறுதி செய்ய வேண்­டும். கிரு­மி­நா­சினி கொண்டு திரை­ய­ரங்க வளா­கத்தை தின­மும் சுத்­தப்­ப­டுத்த வேண்­டும் எனப் பல விஷ­யங்­கள் உள்­ளன,” என்று சுட்­டிக்­காட்­டும் உரி­மை­யா­ளர்­கள் தரப்பு, இத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய கூடு­தல் செல­வு­க­ளைச் சமா­ளிக்க வேண்டி இருக்­கும் என்­கி­றார்­கள்.

இதனால் ஊர­டங்­குக்­குப் பிறகு திரை­ய­ரங்க நுழை­வுச்­சீட்­டின் விலை அதி­க­ரிக்­கும் என்று கூறப்­படு­கிறது. அர­சாங்­கம் விதிக்­கும் கட்­டுப்­பா­டு­க­ளைப் பின்­பற்­றி­னால் திரை­ய­ரங்­கு­களில் 50 விழுக்­காடு ரசி­கர்­களை மட்­டுமே அனு­ம­திக்க முடி­யும் என்­ப­தைச் சுட்­டிக்­காட்­டும் ஒரு தரப்­பி­னர், தேவை­யின்றி கூடு­தல் விலை கொடுக்க ரசி­கர்­கள் தயா­ராக இருப்­பார்­களா என்­ப­தும் கொரோனா கிருமி அச்­ச­மின்றி படம் பார்க்க வரு­வார்­களா என்­ப­தும் கவ­னிக்­கப்­பட வேண்­டிய விஷ­யங்­கள் என்­கின்­ற­னர்.

ஆனால், விஜய் தரப்போ ‘மாஸ்­டர்’ எப்­போது வந்­தா­லும் பெரிய வெற்­றி­யைப் பெறும் என்­கிறது.

இதற்­கி­டையே தமி­ழ­கத்­தில் திரை­ய­ரங்­கு­கள் திறக்­கப்­பட்­டா­லும் வெளி­நா­டு­க­ளி­லும் இயல்­பு­நிலை திரும்­பி­னால்­தான் படத்தை வெளி­யி­டு­வது என ‘மாஸ்­டர்’ தயா­ரிப்­புத் தரப்பு முடிவு செய்­துள்­ள­தாம்.

ஏனெ­னில் வெளி­நாட்டு வெளி­யீட்டு உரி­மையை விற்­ப­தன் மூலம் கிடைக்­கும் கணி­ச­மான தொகையை இழக்க அவர்­கள் தயா­ராக இல்லை.

“அமெ­ரிக்கா, மலே­சியா உள்­ளிட்ட பல நாடு­களில் தமிழ் சினிமா ரசி­கர்­கள் விஜய், அஜீத் படங்­கள் வெளி­யா­கும்போது திரை­ய­ரங்­கத்­துக்கு வந்து கொண்­டா­டு­வார்­கள். இத­னால் வசூல் சிறப்­பாக இருக்­கும். வெளி­நா­டு­களில் திரை­ய­ரங்­கு­கள் திறக்­கப்­பட்­டால்தான் வசூல் குறை­யாது,” என்று தயா­ரிப்­புத் தரப்பு சுட்­டிக்காட்­டு­கிறது.

எனவே, ‘மாஸ்­டர்’ படத்­தின் வெளி­யீடு உலக நாடு­கள் கைக­ளி­லும் அடங்கி உள்­ள­தாக கோடம்­பாக்க விவ­ரப்­புள்­ளி­கள் கூறு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!