பியா: பொறுப்புடன் செயல்பட வேண்டும்

பியா: பொறுப்புடன் செயல்பட வேண்டும்

2 mins read
815cbf36-bac8-4d94-a0c5-d30f7798e6d8
'பொய் சொல்­லப் போறோம்' படம் மூலம் தமிழில் அறி­மு­க­மான நடிகை பியா, நடி­கர் அஜித் எவ்­ளவு பெரிய நடி­கர் என்­பதும் அவ­ருக்­குப் பல கோடி ரசி­கர்­கள் உள்­ள­னர் என்பதும் தெரி­யா­ம­லேயே அவ­ரு­டன் நடித்­த­தா­கச் சொல்­கி­றார் நடிகை பியா பாஜ்­பாய். படம்: ஊடகம் -

கொரோ­னா­வுக்கு எதி­ரான போராட்­டத்­தில் முன்­னி­லை­யில் உள்ள மருத்­து­வர்­கள், காவல்­து­றை­யி­னர் உள்­ளிட்­டோர் மீது தாம் மிகுந்த மரி­யாதை வைத்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார் நடிகை பியா.

உல­கமே முடங்­கி­யுள்ள நிலை­யில் ஒரு­சி­லர் 'நமக்கு ஒன்­றும் ஆகாது' என்­கிற மிதப்­பில் பொறுப்­பின்றி வெளியே சுற்­று­வ­தைப் பார்த்­தால் தமக்கு கோபம் வரு­வ­தாக அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"ஒரு சாதா­ரண நக­ரில் இருந்து பிழைப்பு தேடி மும்பை வந்­த­வள் நான். அங்கு மிக­வும் கஷ்­டப்­பட்டு எனக்­கான வாய்ப்­பு­க­ளைத் தேடி வாழ்க்­கை­யில் உயர்ந்­தேன்.

"குடும்­பத்­துக்­கும் முடிந்த உத­வி­க­ளைச் செய்தேன். இது­தான் பொறுப்­பான செயல். மாறாக ஊர் சுற்­று­வது அல்ல," என்­கி­றார் பியா.

தமிழ் நடி­கர்­களில் இவ­ருக்கு அஜித் மீது மிகுந்த மரி­யாதை உண்­டாம்.

நடி­கர் அஜித் எவ்­ளவு பெரிய நடி­கர் என்­பதும் அவ­ருக்­குப் பல கோடி ரசி­கர்­கள் உள்­ள­னர் என்பதும் தெரி­யா­ம­லேயே அவ­ரு­டன் நடித்­த­தா­கச் சொல்­கி­றார் நடிகை பியா பாஜ்­பாய்.

'பொய் சொல்­லப் போறோம்' படம் மூலம் தமிழில் அறி­மு­க­மான இவர், அடுத்த படத்­திலேயே அஜித்­து­டன் ஒன்­றாக நடிக்­கும் வாய்ப்­பைப் பெற்றார்.

கடந்த 2008ஆம் ஆண்டு அஜித் நடிப்­பில் வெளி­யான 'ஏகன்' படத்­தில் நடித்­த­போது அவ­ரைப் பற்றி பியா­வுக்கு அதிக விவ­ரங்­கள் தெரி­யா­தாம். அதை நினைத்­தால் இப்­போ­தும் வருத்­த­மாக உள்­ளது என்­கி­றார்.

"ராஜு­சுந்­த­ரம் இயக்­கிய 'ஏகன்' படத்­துக்­கான ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­ட­போது அஜித் ஒரு நட்­சத்­திர நடி­கர் என்­பதை அறிந்­தி­ருக்­க­வில்லை. ஒரு பிரம்­மாண்ட படத்­தில் நடிக்­கி­றோம் என்பதையோ, அது வெளி­யான பிறகு தன்­னைப் பற்­றி­யும் ரசி­கர்­கள் அதி­கம் பேசு­வார்­கள் என்­ப­தையோ தாம் உண­ர­வில்லை," என்­கி­றார் பியா.

"ஏற்­காட்­டில் படப்­பி­டிப்பு நடை­பெற்­றது. முதல்­நாள் எனக்­கான காட்­சி­யில் நடிக்க அழைத்­த­போது கேர­வே­னில் இருந்து வெளியே வந்­தேன். அப்போது அங்கு கூடி­யி­ருந்த நூற்றுக் ­கணக்­கான ரசி­கர்­கள் ஆர­வா­ரம் செய்­த­னர். நிச்­ச­ய­மாக அது எனக்­கான ஆர­வா­ரம் அல்ல என்று தெரி­யும்.

"மறு­பக்­கம் திரும்­பிப் பார்த்­த­போ­து­தான் அஜித் சார் அங்கு வந்­தி­ருப்­ப­தை­யும் ரசி­கர்­கள் உற்­சாக மிகு­தி­யில் துள்ளிக் குதிப்­ப­தை­யும் கவ­னித்­தேன். அந்த நொடி­யில்­தான் அவர் ஒரு சூப்­பர் ஸ்டார் என்­ப­தைப் புரிந்­து­கொண்­டேன்.

"ஒரு­வேளை வாழ்க்­கை­யில் நாம் இழந்த ஒன்றை மீண்­டும் பெறு­வ­தற்­காக வாழ்க்­கை­யைப் பண­யம் வைக்க வேண்டி இருந்­தால் நிச்­ச­ய­மாக அஜித் சாரு­டன் ஒரு­நாள் செல­விட அவ்­வாறு செய்­வேன்," என்­கி­றார் தியா.

"அஜித் சாரை பற்­றித் தெரிந்­து­கொள்­ள­வும் அவ­ரைப் பின்­தொ­ட­ரும் ரசி­கர்­க­ளைப் பார்க்­க­வும் அவர்­க­ளு­டைய அன்­பைப் பெற­வும் விரும்­பு­கி­றேன். அவர் என்­னி­டம் இனி­மை­யா­கப் பேசிப் பழ­கி­னார்.

"உண்­மை­யா­கவே அவர் ஒரு சூப்­பர் ஸ்டார் என்­ப­து­டன் மிக­வும் பணி­வான ஒரு மனி­தர்," எனப் பாராட்­டு­கி­றார் பியா.