மியா ஜார்ஜுக்கு திருமணம் நிச்சயித்த பெற்றோர்

மியா ஜார்ஜுக்கு திருமணம் நிச்சயித்த பெற்றோர்

1 mins read
6599f130-98fc-4475-8627-0c240ce36299
'அமரகாவியம்', 'ஒருநாள் கூத்து', 'இன்று நேற்று நாளை' உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்த நடிகை மியா ஜார்ஜுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. படம்: ஊடகம் -

நடிகை மியா ஜார்ஜுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

'அமரகாவியம்', 'ஒருநாள் கூத்து', 'இன்று நேற்று நாளை' உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்த இவர், தற்போது விக்ரமுடன் 'கோப்ரா' படத்தில் நடித்து வருகிறார். மியாவை மலையாளப் படங்களிலும் பார்க்க முடியும்.

இந்நிலையில் திடீரென அவரது வீட்டில் வரன் பார்க்கத் தொடங்கினராம். அந்த வகையில் அஸ்வின் திலீப் என்பவரை இவரது பெற்றோர் தேர்வு செய்ய, மியாவும் அந்தத் தேர்வை ஏற்றுக் கொண்டுள்ளாராம்.

அண்மையில் நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்து முடிந்துள்ள நிலையில், எதிர்வரும் செப்டம்பரில் திருமணம் நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது.