ரசிகர்களுக்கு பிரியா அறிவுறுத்தல்

ரசிகர்களுக்கு பிரியா அறிவுறுத்தல்

1 mins read
906ed572-814b-446e-b4e5-19874317c081
என்னை ஆதரித்துப் பேசுவதற்காக இன்னொரு பெண்ணை இழிவாகப் பேசுவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என தன் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார் பிரியா பவானி சங்கர். படம்: ஊடகம் -

சமூக வலைத்தளத்தில் தம்மை எதிர்த்த ஒரு பெண்ணை ரசிகர்கள் சகட்டுமேனிக்கு விமர்சித்ததை தம்மால் ஏற்க முடியவில்லை என்கிறார் பிரியா பவானி சங்கர்.

அண்மையில் பிரியா தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுக்கு ஒரு பெண் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதையடுத்து அந்தப் பெண்ணுக்கு பிரியாவும் பதில் அளித்திருந்தார்.

ஆனால் பிரியாவின் ரசிகர்கள் கடுப்பாகி விட்டனர். இதையடுத்து அந்தப் பெண்ணை ரசிகர்கள் பலரும் சரமாரியாக விமர்சித்தனர். இதனால் பிரியாவுக்கு தர்மசங்கடமாகி விட்டது.

ஒரு பெண்ணை இவ்வாறு விமர்சிப்பது தமக்குப் பிடிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

"என்னை ஆதரித்துப் பேசுவதற்காக இன்னொரு பெண்ணை இழிவாகப் பேசுவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. நான் அந்தப் பெண்ணுக்கு நாகரிகமான முறையில்தான் பதில் சொல்லியிருக்கிறேன். எனவே, ரசிகர்களில் சிலர் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்," என பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.