லாரன்ஸ்: குழந்தைகளை காப்பாற்றிய சேவை

நடி­கர் லாரன்ஸ் அறக்­கட்­டளை நடத்தி வரும் காப்­ப­கத்­தைச் சேர்ந்த 13 குழந்­தை­கள் கொரோனா கிரு­மித்­தொற்­றின் பிடி­யில் இருந்து விடு­பட்­டுள்­ள­னர்.

இது தொடர்­பாக வெளி­யிட்ட அறிக்­கை­யில், தமது சேவை குழந்­தை­க­ளைக் காப்­பாற்­றி­விட்­ட­தாக நெகிழ்­வு­டன் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

ஒரு வாரத்­துக்கு முன்பு சில குழந்­தை­க­ளுக்கு காய்ச்­சல் அறி­குறி தெரிந்­த­தா­க­வும் இதை­ய­டுத்து நடத்­தப்­பட்ட பரி­சோ­த­னை­யில் 13 குழந்­தை­கள், 3 ஊழி­யர்­கள், 2 மாற்­றுத் திற­னாளி ஊழி­யர்­க­ளுக்கு கிரு­மித்­தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டது என்­றும் குறிப்­பிட்­டுள்ள ராகவா லாரன்ஸ், இத­னால் தாம் மிகுந்த வருத்­தத்­தில் இருந்­த­தா­கக் கூறி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில் சிகிச்­சைக்­குப் பிறகு 13 குழந்­தை­க­ளுக்­கும் தற்­போது தொற்று இல்லை என்று பரி­சோ­த­னை­யில் தெரிய வந்­துள்­ள­தாம். இத­னால் அனை­வ­ரும் மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து வீடு திரும்­பி­யுள்­ள­னர்.

“தன்­ன­ல­மற்ற சேவை புரிந்த அனைத்து மருத்­து­வர்­க­ளுக்­கும் தாதி­யர்க்­கும் நன்றி. நான் நம்­பி­யது போலவே, எனது சேவை என் குழந்­தை­க­ளைக் காப்­பாற்­றி­விட்­டது. அவர்­க­ளுக்­காக பிரார்த்­தனை செய்த அனை­வ­ருக்­கும் நன்றி. சேவையே கட­வுள்,” என லாரன்ஸ் தெரி­வித்­துள்­ளார்.

கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள ஏழை­கள், ஆத­ர­வற்­ற­வர்­கள், திரை­யு­ல­கக் கலை­ஞர்­க­ளுக்­குப் பல்­வேறு வழி­களில் நலத்­திட்ட உத­வி­கள் செய்து வரு­கி­றார் லாரன்ஸ்.

இதற்­கா­கப் பல்­வேறு தரப்­பி­ன­ரும் அவ­ருக்­குப் பாராட்­டும் நன்­றி­யும் தெரி­வித்து வரு­கின்­ற­னர்.