விருதுகளை எதிர்பார்க்கும் 'மாறா' படக்குழுவினர்

விருதுகளை எதிர்பார்க்கும் 'மாறா' படக்குழுவினர்

1 mins read
ccd96224-ecd7-4195-9bc2-0c232ba527d4
'மாறா' படத்தில் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத். படம்: ஊடகம் -

மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் இணைந்து நடிக்கும் படம் 'மாறா'. இது மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'சார்லி' படத்தின் தமிழ் மறுபதிப்பு. மலையாளத்தில் துல்கர் சல்மானும் பார்வதியும் ஜோடியாக நடித்திருந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பு 50 விழுக்காடு முடிவடைந்துவிட்டதாம். ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி மீதமுள்ள காட்சிகளைப் படமாக்க உள்ளனர். மலையாளப் பதிப்பான 'சார்லி' பல்வேறு விருதுகளைப் பெற்றது. அதேபோல் மாதவனுக்கும் 'மாறா'வுக்கும் நிச்சயம் விருது கிடைக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.