கருவுற்ற யானையைக் கொன்றது ஒரு அருவருக்கத்தக்க நிகழ்வு

கருவுற்ற யானையைக் கொன்றது ஒரு அருவருக்கத்தக்க நிகழ்வு

1 mins read
a089c247-1259-49fd-85d8-63ad30e4ff61
-

கேரளாவில் கருவுற்ற யானையை அன்னாசிப் பழத்தில் வெடிமருந்தை வைத்து கொடூரமாகக் கொன்றவர்களை நினைக்கும்போது அருவருப்பாக உள்ளது என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இதற்கு காரணமான அரக்கர்கள் கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டு இறந்து போவார்கள் என தாம் நம்புவதாக தமது சமூக வலைத்தளப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"நான் முன்பே சொன்னதுபோல் அரக்கர்கள் என்பவர்கள் மனிதர்கள்தான். பாவப்பட்ட இந்த மிருகங்கள் அல்ல. மனிதநேயத்துக்கும் பச்சாதாபத்துக்கும் சிறிதேனும் பொது உணர்வு இருப்பதற்கும் படிப்பறிவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை இச்சம்பவம் நிரூபிக்கிறது. இது அருவருக்கத்தக்க ஒரு நிகழ்வு," என்று வரலட்சுமி தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.