நந்தா: இது வலி மிகுந்த அழகான வாழ்க்கை

திரைப்­ப­ய­ணத்­தில் தாம் நிறைய தோல்­வி­களை எதிர்­கொண்­ட­தா­க­வும் ஒவ்­வொரு தோல்­வி­யும் ஒரு பாடத்­தைக் கற்­றுக்­கொ­டுத்­தி­ருப்­ப­தா­க­வும் சொல்­கி­றார் நடி­கர் நந்தா.

‘மவு­னம் பேசி­யதே’, ‘புன்­ன­கைப்­பூவே’, ‘ஈரம்’ என வெற்­றிப் படங்­களில் நடித்­தி­ருப்­ப­வர் அண்­மை­யில் ‘வானம் கொட்­டட்­டும்’ படத்­தி­லும் இரட்டை வேடங்­களில் ரசி­கர்­க­ளின் கவ­னத்தை ஈர்த்­தார்.

இந்­நி­லை­யில் அண்­மைய பேட்டி ஒன்­றில் நாய­க­னா­க­வும் வில்­ல­னா­க­வும் நடித்து ரசி­கர்­க­ளி­டம் நல்ல பெயர் வாங்­கி­ய­தைப் பெரு­மை­யா­கக் கரு­து­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார் நந்தா. தாம் அனு­ப­வித்த வலி­கள் நிறைய நம்­பிக்­கை­யைக் கொடுத்­தி­ருப்­ப­தா­கச் சொல்­ப­வர், கஷ்­டப்­ப­டும்­போ­து­தான் சரி­யான பாதை­யில் போகி­றோம் என்று அர்த்­த­மா­கும் என்­கி­றார்.

தனக்­கென ஒரு வெற்றி இலக்கை நிர்­ண­யித்­தி­ருப்­ப­தா­க­வும் அதற்­காக கடந்த 20 ஆண்­டு­க­ளாக போரா­டிக் கொண்­டி­ருப்­ப­தா­க­வும் சொல்­லும் நந்தா, பல கஷ்­டங்­க­ளைக் கொடுத்­தா­லும் தனது சினிமா வாழ்க்கை மிக­வும் அழ­கா­னது என்­கி­றார்.

தமிழ் ஈழப் போராளி திலீ­ப­னின் வாழ்க்கை வர­லாற்­றைத் திரைப்­ப­ட­மாக்க வேண்­டும் என்­ப­து­தான் நந்­தா­வின் சினி­மாக் கன­வு­க­ளின் உச்­ச­மாம். தனி ஈழக் கோரிக்­கைக்­காக உண்­ணா­வி­ர­தம் இருந்து உயிர்­நீத்த திலீ­ப­னைப் பற்­றிய முக்­கி­ய­மான தக­வல்­களை அனைத்­துத் தரப்­பி­ன­ரி­ட­மும் கொண்­டு­போய்ச் சேர்க்­க­வேண்­டும் என விரும்­பு­கி­றா­ராம்.

“அதற்­கா­கத்­தான் திலீ­பனை மையப்­ப­டுத்தி ஒரு படத்தை உரு­வாக்கி இருக்­கி­றேன். இன்­னும் சில காட்­சி­க­ளைப் பட­மாக்க வேண்டியுள்­ளது. அதன்­பி­றகு முடிந்­த­வரை வேக­மா­கச் செயல்­பட்டு அந்­தப் படைப்பை மக்­க­ளி­டம் கொண்டு சேர்ப்­பேன்,” என்­கி­றார் நந்தா.

தற்­போது ‘பர­ம­பத விளை­யாட்டு’, ‘துப்­ப­றி­வா­ளன்-2’ ஆகிய படங்­களில் நடித்­துக் கொண்­டி­ருக்­கும் இவர், தனி­நா­ய­க­னாக நடிக்­க­வும் சில கதை­க­ளைக் கேட்டு வரு­கி­றா­ராம்.

நடி­கர் விஷா­லின் நெருங்­கிய நண்­ப­ராக அறி­யப்­ப­டு­ப­வர் நந்தா.

நடி­கர் சங்­கத்­துக்­கான கட்­ட­டப் பணி­கள் பாதி­யில் நிற்­பது, தயா­ரிப்­பா­ளர் சங்­கத்­தில் நில­வும் பிரச்­சி­னை­கள் குறித்­துப் பல­ரும் இவ­ரி­டம் கேள்­வி­களை அடுக்­கு­கின்­ற­னர். ஒரு நண்­ப­ராக விஷா­லுக்கு தோள் கொடுப்­ப­தாக சொல்­கி­றார்.

“நடி­கர் சங்க கட்­ட­டம் பாதி­யில் நிற்­கக் கார­ணம் சில­ரது சுய­ந­லம்­தான். குறிப்­பாக தயா­ரிப்­பா­ளர் ஐசரி கணே­ஷைக் குறிப்­பிட வேண்­டும்.

“ஒரு தனிப்­பட்ட மனி­த­ரால் அந்­தக் கட்­ட­டத்­தைக் கட்­ட­மு­டி­யாது. இது ஒரு கூட்டு முயற்சி, உழைப்பு. கட்­ட­டப் பணி­கள் 80 விழுக்­காடு முடி­வ­டைந்த நிலை­யில் தடுத்து நிறுத்தி இருக்­கி­றார்­கள். தயா­ரிப்­பா­ளர் சங்­கத்­துக்­குத் தலை­வ­ராக விஷால் பொறுப்­பேற்ற பிறகு எது­வும் செய்­ய­வில்லை என்று சிலர் சொல்­கி­றார்­கள். அப்­ப­டி­யா­னால் நேர­டி­யா­கத் தேர்­தலை நடத்­தி­யி­ருக்க வேண்­டும். அது­வும் நடக்­க­வில்லை. நடி­கர் சங்க பிரச்­சி­னைக்­குத் தீர்வுகாணும் பொருட்டு ஐசரி கணே‌ஷ் சாரும் நடி­கர் கார்த்­தி­யும் சந்­தித்­துப் பேசினர்.

“சங்­கத்­துக்­குள் விஷால் வரக்­கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார் ஐசரி கணே­சன். இதை எப்­படி ஏற்­க­மு­டி­யும்?” என்று தன் நண்­ப­ருக்­காக வாதி­டு­கி­றார் நந்தா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!