சிபிராஜ், நிகிலா விமல் ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் 'ரங்கா'. அறிமுக இயக்குநர் வினோத் இயக்கியுள்ளார். பாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே.செல்லையா தயாரிக்கிறார். அடிதடியும் திகிலும் கலந்து உருவாகும் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ராம் ஜீவன். "பெரும்பாலான காட்சிகளை காஷ்மீரில் படமாக்கினோம். அங்கு இதுவரை படப்பிடிப்பு நடத்தப்படாத இடங்களுக்குச் சென்றோம். இதற்காக நிறைய உடல் உழைப்பு தேவைப்பட்டது. மேலும் பனிப் புயலும் எங்களை மிரட்டியது. எனினும் சற்றும் சளைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு இடையே படப்பிடிப்பை முடித்தோம். காதல் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. சண்டைக் காட்சிகள் பிரமாதமாக வந்துள்ளன," என்கிறார் இயக்குநர் வினோத்.
காஷ்மீரில் கடும் பனிப்புயலுக்கு மத்தியில் படமாக்கப்பட்ட 'ரங்கா' படக் காட்சிகள்
1 mins read
சிபிராஜ், நிகிலா விமல் ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் 'ரங்கா'. அறிமுக இயக்குநர் வினோத் இயக்கியுள்ளார். படம்: ஊடகம் -

