முதலில் திரையரங்கில் வெளியாகிறது தலைவி

முதலில் திரையரங்கில் வெளியாகிறது தலைவி

1 mins read
94bc3fd3-1495-4edb-89bd-f86b8c801d25
கங்கனா ரணாவத் நாயகியாக நடித்துள்ள 'தலைவி' படத்தின் மின்னிலக்க வெளியீட்டு உரிமை ரூ.55 கோடிக்கு விற்பனையாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படம்: ஊடகம் -

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ஏ.எல். விஜய் இயக்கத்தில் 'தலைவி' என்ற தலைப்பில் உருவாகி வருவது தெரிந்த சங்கதி.

கங்கனா ரணாவத் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தின் மின்னிலக்க வெளியீட்டு உரிமை ரூ.55 கோடிக்கு விற்பனையாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து இப்படம் நேரடியாக இணையத்தில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. ஆனால், அது தவறான தகவல் என்றும் திரையரங்கில்தான் 'தலைவி' முதலில் வெளியாகும் என்றும் கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் கருணாநிதியாக பிரகாஷ் ராஜும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது. ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தமிழ் மற்றும் இந்தி பதிப்புகளின் மின்னிலக்க உரிமத்தை அமேசான் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனங்கள் 55 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளன. எனினும் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் என்பதால் முதலில் திரையரங்குகளில் வெளியிடுவதுதான் சரியாக இருக்கும் என்று கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.