'விராட பருவம் 1992' படத்தின் முதல்தோற்ற சுவரொட்டி

'விராட பருவம் 1992' படத்தின் முதல்தோற்ற சுவரொட்டி

1 mins read
da8a8c1c-73c1-4068-89e4-ff368f89b058
-

'விராட பருவம் 1992' என்ற படத்தில் நக்சலைட்டாக நடித்துள்ளார் நடிகை பிரியாமணி.

இவரது கதாபாத்திரத்துக்கான தோற்றத்துடன் வெளியாகியுள்ள முதல் தோற்ற சுவரொட்டி சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

இப்படத்தில் 'பாகுபலி' புகழ் ராணா டகுபதி நாயகனாகவும் சாய்பல்லவி நாயகியாகவும் நடித்துள்ளனர்.

கடந்த 4ஆம் தேதி பிரியாமணியின் பிறந்தநாள். இதையடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிறந்தநாள் பரிசாக முதல் தோற்ற சுவரொட்டியை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் பிரியாமணியின் தோற்றம் மிரள வைப்பதாக ரசிகர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

"இந்தக் கதாபாத்திரம் 'பருத்திவீரன்' 'முத்தழகு'க்குப் பிறகு எனது ரசிகர்களால் நிச்சயம் பல ஆண்டுகளுக்குப் பேசப்படும். அந்தளவுக்கு நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது," என்கிறார் பிரியாமணி.