ஊரடங்குக்கு முன்னால் துவங்கப்பட்ட பல திரைப்படங்கள் அப்படியே முடங்கி உள்ளன.
படப்பிடிப்பு நடத்தப்பட்டாலும்கூட ஒருவருக்கு ஒருவர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும் என்ற விதிமுறைகளால் பல காட்சிகளைப் படமாக்குவதில் படக்குழுவினர் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
இந்நிலையில் சிம்புவின் 'மாநாடு' படக்குழுவினர் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஊரடங்கிற்கு ஏற்ப, அரசின் விதிமுறைகளை சுலபமாக பின்பற்றும் வகையில் கதை ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்தப் புதுப்படத்தையும் 'மாநாடு' சுரேஷ் காமாட்சிதான் தயாரிக்க உள்ளார்.
சிம்பு, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடிக்க வெங்கட் பிரபு தான் இயக்குகிறார்.
இதில் சுவாரசியம் என்னவென்றால் இப்புதுப்படத்தில் பங்கேற்கும் யாருக்குமே சம்பளம் கிடையாதாம்.
படத்தின் வியாபாரத்திற்குப் பிறகு லாபத்தைப் பிரித்துக்கொள் வதாகத் திட்டம். குறைவான நடிகர்களே இப்படத்தில் நடிக்க உள்ளனர்.

