கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மரணம்

கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மரணம்

1 mins read
a4f99851-d1aa-47a7-9827-b7f7205e49ac
கணவர் சிரஞ்சீவி சார்ஜாவுடன் நடிகை மேக்னா ராஜ். -

கன்னட நடிகரும், நடிகை மேக்னா ராஜின் கணவருமான சிரஞ்சீவி சார்ஜா தனது 39வது வயதில் மாரடைப்பால் காலமானார்.

'காதல் சொல்ல வந்தேன்', 'உயர்திரு 420' போன்ற படங்களில் நடித்தவர் நடிகை மேக்னா ராஜ்.

இவர் நடிகர் அர்ஜுனின் உறவினரும் கன்னட நடிகருமான சிரஞ்சீவியை 10 ஆண்டுகளாக காதலித்து, கடந்த 2017இல் திருமணம் செய்து கொண்டார். சிரஞ்சீவியும் கன்னடத்தில் பிரபலமான நடிகர். ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

'சண்டக்கோழி' படத்தின் கன்னட மறுபதிப்பான 'வாயுபுத்ரா' படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதன்பின் 'பையா' படத்தின் மறுபதிப்பான 'அஜித்', 'பிச்சைக்காரன்' படத்தின் மறுபதிப்பான 'ஐ லவ் யு அம்மா' போன்ற 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இப்போதும் நான்கு படங்கள் கைவசம் வைத்திருந்தார்.

இந்நிலையில் ஜூன் 6ஆம் தேதியன்று சிரஞ்சீவிக்கு திடீரென்று மூச்சுத்திணறலும் நெஞ்சு

வலியும் ஏற்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார்.