சுதந்திர தினத்தில் வெளியாகிறது சூர்யாவின் 'சூரரைப் போற்று'

சுதந்திர தினத்தில் வெளியாகிறது சூர்யாவின் 'சூரரைப் போற்று'

1 mins read
77537e8b-4142-476c-8218-12cdfa4a6867
-

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'சூரரைப் போற்று'. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

மேலும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் '2டி என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தயாரித்துள்ளது.

முன்பு படத்தை ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. தற்போது கொரோனா அச்சத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போயுள்ளது.

இந்நிலையில், 'சூரரைப்போற்று' படத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு தணிக்கைக்குழு 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறது. அதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர்.