ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு நடிகர் சூரி உதவி

1 mins read
69c74c86-7278-4e7c-98bf-d29107d6c15a
திரைத்துறையைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நகைச்சுவை நடிகர் சூரி. படம்: ஊடகம் -

திரைத்­துறை நண்­பர்­கள், மாற்­றுத் திற­னா­ளி­கள், திரு­நங்­கை­யர்­களுக்கு நிவா­ர­ணப் பொருட்­களை வழங்­கி­யுள்­ளார் நடிகர் சூரி.

இந்த நல்ல காரி­யத்­தில் வேலம்­மாள் நெக்­ஸஸ் கல்­விக் குழு­ம­மும் மாற்­றம் பவுண்­டே­ஷ­னும் இணைந்து கொண்­டன.

இந்­நி­கழ்­வில் பேசிய சூரி, கடந்த மூன்று மாதங்­களில் உலக மக்­கள் அனை­வ­ரும் ஒன்று சேர்ந்து படித்த ஒரே பாடம் இந்த கொரோனா கிரு­மி­தான் என்­றார்.

"பயப்­ப­டா­மல் இருங்­கள், அதே நேரத்­தில் மெத்­த­ன­மாக இருக்­கா­தீர்­கள். உங்­கள் வீட்­டில் இருக்­கும் பெரி­ய­வர்­க­ளுக்கு அதிக பாது­காப்பு கொடுங்­கள்.

மீண்­டும் நாம் அனை­வ­ரும் இயல்புநிலைக்கு வர அந்த இறை­வனை வேண்­டிக்­கொள்­கி­றேன்," என்­றார் சூரி.