சிம்புவுக்கு திருமணம் நடக்க இருப்பதாக வெளியான தகவலை அவரது பெற்றோர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
சிம்புவுக்கும் லண்டன் தொழிலதிபரின் மகளுக்கும் ஊரடங்கு முடிந்த பிறகு திருமணம் நடக்க இருப்பதாக அண்மையில் செய்தி வெளியானது. இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆனால், இத்தகவல் பொய்யானது என அவரது பெற்றோர் டி.ராஜேந்தரும் உஷாவும் மறுத்துள்ளனர். சிம்புவின் சாதகத்திற்கு ஏற்ப பொருத்தமான வரனைத் தேடி வருவதாகவும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
"சிலம்பரசனுக்கு ஏற்ற பெண் அமைந்ததும் அந்த நல்ல செய்தியை ஊடகங்கள் வாயிலாக நாங்களே மகிழ்ச்சியோடு அறிவிப்போம். அதுவரை ரசிகர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என இருவரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

