சிவ­கார்த்­தி­கே­யன் நடிக்கும் சிரிக்க வைக்கும் ‘டாக்டர்’

சிவ­கார்த்­தி­கே­யன் நடிப்­பில் வேக­மாக வளர்ந்து வரு­கிறது ‘டாக்­டர்’. படத்­தின் முதல் தோற்­றச் சுவ­ரொட்­டிக்கே ரசி­கர்­கள் மத்­தி­யில் நல்ல வர­வேற்பு கிடைத்­தி­ருப்­ப­தால் உற்­சா­க­மாக உணர்­வதா­கச் சொல்­கி­றார் இயக்­கு­நர் நெல்­சன் திலீப்­கு­மார்.

‘கோல­மாவு கோகிலா’வுக்­குப் பிறகு இவ­ரது மவுசு கோடம்­பாக்­கத்­தில் அதி­க­ரித்­துள்­ளது.

‘டாக்­டர்’ என்ற தலைப்­பை­யும் முதல்­தோற்­றச் சுவ­ரொட்­டி­யை­யும் பார்த்த பலர் இது மருத்­து­வத்­துறை சார்ந்த குற்­றங்­களை தோலு­ரித்­துக் காட்­டும் கதையா என்று கேட்­கி­றார்­க­ளாம்.

‘அப்­படி எது­வும் இல்லை’ என்று சொல்­லும் நெல்­சன், இப்­ப­டத்­தில் சிவா­வின் வழக்­க­மான நகைச்­சு­வை­தான் சற்று கூடு­த­லாக இருக்­கும் என்­கி­றார்.

“சிவாவை பொறுத்­த­வரை மற்­ற­வர்­களை சிரிக்க வைத்து மகி­ழும் கலை­ஞர். எனவே அவ­ருக்கு ஏற்ற மாதிரி வணிக அம்­சங்­கள் நிறைந்த நகைச்­சு­வைப் பட­மாக திரை­ய­ரங்­குக்கு வரும் ரசி­கர்­களை உற்­சா­கப்­ப­டுத்­தும் வகை­யில் ஒரு கதையை அமைத்­தி­ருக்­கி­றோம்.

“’வேலைக்­கா­ரன்’, ‘ஹீரோ’ போன்று சமூக அக்­க­றை­யு­டன் உரு­வாக்­கப்­பட்ட கதையா என்­றும் சிலர் கேட்­கின்­ற­னர். அப்­ப­டிப்­பட்ட படங்­களை எடுக்க வேண்­டு­மெ­னில் முத­லில் சமூ­கத்­துக்கு எது தேவை, தேவை­யில்லை என்­பது எனக்­குத் தெரிந்­தி­ருக்க வேண்­டும்.

“தற்­போ­தைய சூழ­லில் அப்­ப­டிப்­பட்ட படங்­களை எடுக்­கும் எண்­ணம் எனக்கு இல்லை. தவிர தமிழ்ச் சினிமா எப்­போ­துமே பொழு­து­போக்கு அம்­சங்­கள் கொண்ட வணி­கச் சந்­தை­யா­கவே உரு­வெ­டுத்­துள்­ளது. எனவே அப்­ப­டிப்­பட்ட படங்­கள்­தான் தேவை.

“ரசி­கர்­கள் நகைச்­சு­வையை நம்­பியே படம் பார்க்க திரை­ய­ரங்­குக்கு வரு­கி­றார்­கள். அவர்­க­ளி­டம் கருத்து சொல்ல வேண்­டும் என்ற எண்­ணம் எனக்கு ஏற்­பட்­டதே இல்லை. அதற்­காக தர­மற்ற ஒரு வணி­கப்­ப­டத்தை எடுக்க மாட்­டேன்.

“டாக்­டர்’ பொழு­து­போக்­குப் பட­மா­கத்­தான் இருக்­கும். இப்­ப­டத்­தில் இது சரி, அது தவறு என்­றெல்­லாம் எதை­யும் விவா­திக்­க­வில்லை,” என்­கி­றார் நெல்­சன் திலீப்­கு­மார்.

கதைப்­படி ஒரு முக்­கி­ய­மான சம்­ப­வம் நிகழ்­கிறது. அதில் ஐந்­தாறு பேர் பாதிக்­கப்­ப­டு­கி­றார்­கள். அச்­சம்­ப­வத்­தின் தாக்­கத்­தில் இருந்து அவர்­கள் எப்­படி மீண்டு வரு­கி­றார்­கள் என்­பதை சுவா­ர­சி­ய­மாக விவ­ரிக்­கு­மாம் ‘டாக்­டர்’.

படத்­தின் முதல் பாதி­யில் யோகி பாபு தொலைக்­காட்சி நிகழ்ச்­சித் தொகுப்­பா­ளர். அர்ச்­சனா, இள­வரசு, ‘கோல­மாவு கோகிலா’ ரெடின் என நிறைய பேர் சிரிக்க வைப்­பார்­க­ளாம்.

இரண்­டா­வது பாதி­யின் சில பகு­தி­கள் கோவா­வில் பட­மாக்­கப்­ப­டு­கின்­றன. அவற்­றில் சில புது­மு­கங்­களும் தங்­கள் பங்­குக்கு அசத்­து­வார்­க­ளாம்.

‘கோல­மாவு கோகிலா’வைப் போலவே இந்­தப் படத்­தி­லும் சில கதா­பாத்­தி­ரங்­கள் மன­தில் பதி­யும் வகை­யில் இருக்­கு­மாம்.

‘டாக்­டர்’ படத்­தில் சிவா­வுக்கு ஜோடி­யாக புது­மு­கம் பிரி­யங்கா மோகன் நடிக்­கி­றார். இவ­ருக்கு நாட­கங்­களில் நடித்த அனு­ப­வம் உண்­டாம். மேலும் தெலுங்கு படத்­தில் சரண்யா பொன்­வண்­ண­னு­டன் ஒரு படத்­தில் நடித்­துள்­ளார்.

‘டாக்­டர்’ படத்­தில் பிரி­யங்­காவை நடிக்க வைப்­பது குறித்து இயக்­கு­நர் யோசித்­துக் கொண்­டி­ருந்­த­போது சரண்­யாவை தொடர்­பு­கொண்டு பேசி­னா­ராம்.

“அப்­போது பிரி­யங்கா குறித்து சரண்யா நல்­ல­வி­த­மாக பல விஷ­யங்­களை எடுத்­துச் சொன்­னார். நடிப்­பில் முன் அனு­ப­வம் இருப்­ப­தால் கதைக்கு ஏற்ற நாய­கி­யாக இருப்­பார் என்­றும் சிபா­ரிசு செய்­தார். அத­னால் தயக்­க­மின்றி ஒப்­பந்­தம் செய்­தோம்.

“வில்­ல­னாக நடிக்க உய­ர­மான நடி­கர் இருந்­தால் நன்­றாக இருக்­கும் எனக் கரு­தி­னேன். இத­னால் நடி­கர் வினய் ஒப்­பந்­த­மா­னார். ‘துப்­ப­றி­வா­ளன்’ படத்­தில் ஏற்­கெ­னவே வில்­ல­னாக நடித்­தி­ருப்­பது தெரி­யும். கதை­யைச் சொன்­ன­வு­டன் மிகுந்த உற்­சா­கத்­து­டன் பேசி­னார். இப்­ப­டிப்­பட்­ட­வர்­க­ளோடு இணைந்து பணி­யாற்­று­வது எனக்கு ரொம்­பப் பிடிக்­கும்.

“மொத்­தத்­தில் அரு­மை­யான ஒரு குழு­வு­டன் இணைந்து பணி­யாற்றி வரு­கி­றேன்,” என்­கி­றார் நெல்­சன்.

ஏன் சிவா­வு­டன் முன்பே இணைந்து பணி­யாற்­ற­வில்லை?

“தொலைக்­காட்­சி­யில் பணி­யாற்­றியபோதே நானும் சிவா­வும் நல்ல நண்­பர்­கள். அன்று எப்­படி பேசிக் கொண்­டோமோ அது போன்­றே­தான் இன்­ற­ள­வும் இருக்­கி­றோம்.

“சிவா இன்­னும் மாற­வில்லை. உய­ரங்­களை எட்­டிப் பிடித்­தா­லும் எளி­மை­யாக இருக்­கி­றார். நான் பட­மெ­டுக்க தயா­ராக இருந்­த­போது அவர் வேறு எண்­ணத்­தில் இருந்­தார். அதே­போல் அவர் தயா­ராக இருக்­கும்­போது நான் வேறு வேலை­யில் இருந்­தேன்.

“இந்­நி­லை­யில் திடீ­ரென அவரே தொடர்பு கொண்டு நாம் இணை­கி­றோம் என்­றார். கதை­யை­யும் கூட என்­னையே தேர்வு செய்­யு­மாறு கூறி­விட்­டார். அவ­ருக்காக மூன்று கதைகளைத் தயார் செய்து வைத்திருந்தேன். அவற்றுள் ஒன்றுதான் இந்தப் படம். நிச்சயம் இது அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும்,” என்கிறார் நெல்சன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!