கொரோனா விவகாரத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
ஏற்கெனவே முதல்வர் நிவாரண நிதி, நடனக் கலைஞர்கள் சங்கம், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் என 3 கோடி ரூபாய் நிதி வழங்கி இருக்கிறார் லாரன்ஸ்.
இதையடுத்து தாம் நடிக்கும் அடுத்த படத்துக்கான சம்பளத்தில் இருந்து தூய்மைப் பணியாளர்களுக்கு 25 லட்சம் ரூபாய் நிதியளிப்பதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் லாரன்ஸின் அடுத்த படத்தைத் தயாரிக்கும் கதிரேசன் தூய்மைப் பணியாளர்களின் வங்கிக்கணக்கில் 25 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 3,385 தூய்மைப் பணியாளர்கள் பயனடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

