உயரமான மனிதரின் உயர்ந்த உள்ளம்

உயரமான மனிதரின் உயர்ந்த உள்ளம்

1 mins read
e77b92eb-943e-4f40-bac1-486c62c5e70c
-

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல உதவியாக இந்தி திரையுலகின் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் தனது சொந்த செலவில் 6 விமானங்களை ஏற்பாடு செய்துள்ளார்.

மும்பையில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி, பிரயாக்ராஜ், கோரக்பூருக்கு தலா 2 விமானங்கள் என மொத்தம் 6 விமானங்களில் 1,547 தொழிலாளர்களை அழைத்துச் செல்ல அமிதாப் பச்சன் ஏற்பாடு செய்து, அவரவர் தங்கள் ஊர்களுக்குச் சென்று சேர்ந்திருக்கின்றனர்.

ஏற்கனவே கடந்த மாதம் மும்பையில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பி வைக்க அமிதாப் பச்சன் 10 பேருந்துகளை ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மும்பை ஜூகுவில் உள்ள தனது 'ஜல்சா' பங்களாவில் ரசிகர்களை சந்திப்பார்.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக வாராந்திர ரசிகர்கள் சந்திப்பை நிறுத்தினார். இந்த நிலையில், 'ஜல்சா' பங்களா வீட்டு முன் துப்புரவுப் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது அவர்களைச் சந்தித்து துப்புரவு தொழிலாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இந்த சந்திப்பின்போது, தெருவை சுத்தம் செய்யும் அவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

உண்மையிலேயே இவர் உயரத்திற்கு ஏற்ற உயர்ந்த உள்ள கொண்டவர் என்று பாராட்டுகின்றனர் திரையுலகினர்.