தோல்விகளைச் சந்திக்காத இயக்குநர் என்ற பெயரை தக்கவைத்திருக்கும் எஸ்.எஸ்.ராஜமௌலி, 'பாகுபலி' படத்தின் மூலமாக பிரமாண்ட இயக்குநர்களின் பட்டியலில் உலக அளவில் இடம்பெற்றுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
'பாகுபலி' படத்தின் வெற்றியை தொடர்ந்து 'ஆர்ஆர்ஆர்' என்கிற படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ராஜமௌலி.
ஆங்கிலேயர் கால பின்னணியில் சுதந்திரப் போராட்டக் களத்தில் உருவாகிவரும் இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இருவரும் சுதந்திர போராட்ட வீரர்களாக நடிக்கின்றனர்.
படத்தில் இரண்டு நாயகிகள். அதில் ஒருவர் பாலிவுட் நடிகை ஆலியா பட். மற்றொரு நாயகிலண்டனைச் சேர்ந்த ஒலிவியா மோரிஸ்.
இந்தப் படத்தில் ஆங்கிலேயே இளவரசியாக நடிப்பதற்காகத்தான் லண்டனைச் சேர்ந்த இவர் கதாநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நடித்திருந்த '7 ட்ரையல் 7 டேய்ஸ்' என்கிற தொடரில் இவரது நடிப்பை கண்டு வியந்து போய், அதன்பிறகே இவரை இந்தப் படத்தில் நாயகியாக்கினார் ராஜமௌலி.
தற்போது கொரோனா தாக்கத்தால் படப்பிடிப்பு தேதிகள் அனைத்திலும் மாற்றம் செய்யவேண்டிய சூழல் தானாகவே உருவாகிவிட்டது.
இதில் லண்டனைச் சேர்ந்த ஒலிவியா, கொரோனாவைக் காரணம் காட்டி இந்த ஆண்டு தன்னால் இந்தியா வரமுடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டாராம்.
அதனைத் தொடர்ந்து ஆலியா பட், அடுத்தடுத்து இந்திப்படங்களில் நடிப்பதற்காக கொடுத்த தேதிகள் தன்னை நெருங்கிக் கொண்டிருப்பதாக கூறி ராஜமௌலியை சிக்கலில் மாட்டிவிட்டிருக்கார்.
இதனால் டென்சனாகிய ராஜமௌலி அவர்கள் இல்லாதக் காட்சிகளை எடுக்க படப்பிடிப்புக் குழுவிற்கு உத்தரவிட்டிருக்கிறார்.
அண்மையில் ஸ்ரேயா சரண் இந்தப் படத்தில் நடிப்பதாக செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தார். அவர் இந்தப் படத்தில் ஒரு கௌரவ வேடத்தில்தான் நடிக்க இருக்கிறார் என்று கூறியுள்ளது படக்குழு.

