தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்நிலையில் நடிகை ஷ்ருதிஹாசன் மும்பையில் இருந்த தனது வீட்டைத் திடீரென காலி செய்துவிட்டு வேறு ஊருக்குச் சென்றுவிட்டார் என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
ஸ்ருதிஹாசன் கடந்த சில ஆண்டுகளாக மும்பையில் இருந்துகொண்டே தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். இந்த நிலையில் மும்பையில் தற்போது கொரோனா கிருமித் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. அதனை அடுத்து உடனடியாக அவர் மும்பை வீட்டை காலி செய்துவிட்டு சென்னையில் குடியேற முடிவெடுத்தார்.
ஆனால், மும்பையைப்போல் சென்னையிலும் கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதால் அவர் ஹைதராபாத்தை தேர்வு செய்து அங்கு சென்றுவிட்டார். அங்கு அவர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கிறார்.
தற்பொழுது பவன் கல்யாணுடன் நடிக்கும் படத்திலும் ரவி தேஜாவுடன் நடிக்கும் படத்திலும் ஷ்ருதிஹாசன் நடித்துக் கொண்டு வருவதால் அவர் ஹைதராபாத்தில் இருந்து கொண்டே படப்பிடிப்புக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்சேதுபதியுடன் ஷ்ருதிஹாசன் நடித்து வரும் 'லாபம்' என்ற தமிழ்ப்படத்தின் படப்பிடிப்பு கொரோனாவால் நிறுத்தப்பட்டு உள்ளது. அதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும்போது அவர் ஹைதராபாத்திலிருந்து சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்
படுகிறது.

