'ராபின்ஹுட்' படத்தில் நாயகனாக நடித்துள்ளார் மொட்டை ராஜேந்திரன். கார்த்திக் பழனியப்பன் இயக்கியுள்ள இப்படம் நகைச்சுவை ரகளையாக இருக்குமாம். இருப்பவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களுக்கு அள்ளிக் கொடுப்பதுதான் ராபின்ஹுட் கதாபாத்திரம். மொட்டை ராஜேந்திரன் கதாபாத்திரம் இப்படித்தான் அமைக்கப்பட்டுள்ளதாம். கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் இப்படம் வெளியீடு காண உள்ளது. சங்கிலி முருகன், சதீஷ், முல்லை, அம்மு அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீநாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு இக்பால் அஸ்மி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். அம்மு அபிராமியின் நடிப்பை படக்குழுவினர் வெகுவாகப் பாராட்டுகின்றனர்.
நகைச்சுவை ரகளையாக உருவாகியுள்ளது 'ராபின்ஹுட்'
1 mins read
-

