கருணாகரனும் யோகிபாபுவும் நடித்த பன்னிக்குட்டி

கருணாகரனும் யோகிபாபுவும் நடித்த பன்னிக்குட்டி

1 mins read
caa5376d-5643-4272-9c26-18d295d8b953
'பன்னிக்குட்டி' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. -

அனுசரண் இயக்கத்தில் 'பன்னிக்குட்டி' என்ற பெயரில் உருவாகி வரும் புதுப்படத்தில் கருணாகரனும் யோகிபாபுவும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க கிராமப் பின்னணியில் உருவாகி உள்ளது இப்படம்.

"இன்றைய தேதியில் தற்சார்பு பொருளாதாரத்தையும், சுயசார்பு வாழ்க்கையையும் பற்றி நாம் நிறைய தெரிந்துகொள்ள வேண்டும். உலகத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் நாம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியாது.

"இதை வலியுறுத்தும் வகையில் இந்தப் படம் உருவாகிறது. அதேசமயம் சில விஷயங்களைத் தீவிரமாக வலியுறுத்தும்போது போரடித்துவிடும். எனவே, நகைச்சுவையையும் சரிவிகிதத்தில் கலப்பது அவசியமாகிறது. அப்படித்தான் நான் பின்பற்றி இருக்கிறேன்.

"இசையமைப்பாளர் கே. கதையின் தன்மைக்கு ஏற்ப தன் பணியைச் செய்திருக்கிறார். சதீஷ் முருகனின் ஒளிப்பதிவு கச்சிதமாக உள்ளது. யோகி பாபுவும் கருணாகரனும் இப்படத்தின் இருதூண்கள்.

"ஒட்டுமொத்த படக்குழுவினரும் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றினர். இது போன்ற உழைப்பு நிச்சயம் சோடை போகாது. அந்த நம்பிக்கையுடன் பட வெளியீட்டிற்காக காத்திருக்கிறோம்," என்கிறார் இயக்குநர் அனுசரண்.

இப்படத்தில் சிங்கம்புலி, திண்டுக்கல் லியோனி, டி.பி. கஜேந்திரன், ராமர், தங்கதுரை என மேலும் பலர் நகைச்சுவைக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர்.