நன்றி தெரிவித்த ரியோ ராஜ்

நன்றி தெரிவித்த ரியோ ராஜ்

1 mins read
e6e1bea2-0534-4aac-b8a5-862e6117349f
'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' படத்தில் ஒரு காட்சி. -

'நெஞ்­ச­முண்டு நேர்­மை­யுண்டு' படம் வெளி­யாகி ஓராண்டு ஆகி­விட்­டது. அந்த வகை­யில் ஜூன் 14ஆம் தேதி தன் வாழ்க்­கை­யில் மறக்க முடி­யாத நாள் என சமூக வலைத்­த­ளப் பதிவு ஒன்­றில் குறிப்­பிட்­டுள்­ளார் அப்­ப­டத்­தின் நாய­கன் ரியோ ராஜ்.

சிவ­கார்த்­தி­கே­யன் தயா­ரிப்­பில் உரு­வான படம் இது. இதற்­காக அவ­ருக்கு நன்றி தெரி­வித்­துள்­ளார் ரியோ.

"நான் அறி­மு­க­மான திரைப்­ப­டம், அரு­மை­யான இயக்­கு­நர், அற்­பு­த­மான தயா­ரிப்­பா­ளர் ஆகி­யோ­ரு­டன் அழ­கான ஒரு குடும்­பத்­தை­யும் எனக்­குத் தந்­துள்­ளது.

"என்­றுமே சிவா அண்­ணா­வுக்கு நன்­றிக்­க­டன் பட்­டி­ருக்­கி­றேன். அவர் இன்றி எனது சினிமா கனவு சாத்­தி­ய­மாகி இருக்­காது. சீக்­கி­ரமே இன்­னொரு படம் பண்­ணு­வோம்," என்று குறிப்­பிட்­டுள்­ளார் ரியோ.