தேஜஸ்வி: திரையுலக பாலியல் தொல்லையை ஒழித்துக்கட்ட வேண்டும்

தேஜஸ்வி: திரையுலக பாலியல் தொல்லையை ஒழித்துக்கட்ட வேண்டும்

3 mins read
33aaaf95-33ef-4fd2-9c17-755d3ea95e24
-

நடிக்க வாய்ப்பு தரு­வ­தா­கக் கூறி சில தயா­ரிப்­பா­ளர்­களும் இயக்­கு­நர்­களும் பெண்­க­ளைத் தவ­றா­கப் பயன்­ப­டுத்­திக்கொள்­ளும் சம்­ப­வங்­கள் திரை­யு­ல­கில் நடப்­ப­தாக நடிகை தேஜ­ஸ்வி கூறி­யுள்­ளார்.

ஆந்­தி­ரா­வைச் சேர்ந்த இவர், தெலுங்­கில் பல படங்­களில் நடித்து ரசி­கர்­க­ளின் மனம் கவர்ந்­த­வர். தமி­ழில் 'நட்­ப­தி­கா­ரம் 79' என்ற படத்­தில் நடித்­துள்­ளார். தற்­போது நடி­கர் விம­லு­டன் ஜோடி சேர்ந்து ஒரு படத்­தில் நடிப்­ப­தா­கத் தக­வல்.

இந்­நி­லை­யில் தயா­ரிப்­பா­ளர்­க­ளின் ஆசைக்கு இணங்­கு­வ­தா­லேயே மும்பை நடி­கை­க­ளுக்­குப் பட­வாய்ப்­பு­கள் அதி­க­ள­வில் கிடைப்­ப­தாக கூறி­யுள்­ளார் தேஜஸ்வி. அவ­ரது இந்­தப் பேச்சு சல­ச­லப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

"நானும்­கூட நடிக்க வந்த புதி­தில் இது­போன்ற பிரச்­சி­னை­களை எதிர்­கொண்­டேன். சில­ரது பாலி­யல் தொல்­லை­களைத் தாங்­க­மு­டி­யா­மல் திரை­யு­லகை விட்டே விலக நினைத்­தேன்.

"என்­னைப் போல் பல நடி­கை­கள் இத்­த­கைய தொல்­லை­களை எதிர்­கொண்­டுள்­ள­னர்," என்­கி­றார் தேஜஸ்வி.

தென்­னிந்­திய நடி­கை­கள் நீச்­சல் உடை, முத்­தக் காட்சி­களில் நடிக்க மிக­வும் கூச்சப்­ப­டு­வ­தாக குறிப்­பிட்­டுள்ள அவர், தமிழ், தெலுங்கு மட்­டு­மல்­லா­மல் இதர மொழி­க­ளி­லும் நடி­கை­க­ளுக்குப் பாலியல் தொல்­லை­கள் இருப்­ப­தாக கூறி­யுள்­ளார்.

"சில மும்பை நடி­கை­கள் இத்­த­கைய தொல்­லை­கள் குறித்து கவ­லைப்­ப­டு­வ­தில்லை.

"பட­வாய்ப்­பு­கள் கிடைக்­க­வேண்­டும் என்­ப­தற்­காக மன­ரீ­தி­யில் இதற்கு உடன்படத் தயா­ராகி விடு­கி­றார்­கள். இதனால்­தான் வாய்ப்­பு­கள் கிடைக்­கின்­றன.

"சினிமா வாய்ப்­புக்­காக படுக்­கைக்கு அழைப்­பது தென்­னிந்­திய நடி­கை­க­ளுக்கு நன்கு தெரி­யும். ஆனால், அவர்­கள் அதற்­குச் சம்­ம­திப்­ப­தில்லை," என்று வெளிப்­ப­டை­யா­கப் பேசு­கி­றார் தேஜஸ்வி.

திரை­யு­ல­கில் நில­வும் பாலி­யல் சீண்­டல்­கள் கார­ண­மாக இவ­ரது காதல் கைகூ­டா­மல் போன­தாம். இன்­ற­ள­வும் தமக்கு அந்த வருத்­தம் இருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"நான் ஒரு­வரை மன­தா­ரக் காத­லித்­தேன். இரு­வ­ரும் திரு­ம­ணத்­துக்­கும் தயா­ரா­னோம். ஆனால், சினி­மா­வில் படுக்­கைக்கு அழைக்­கும் வழக்­கம் இருப்­ப­தைக் கேள்­விப்­பட்ட அவ­ருக்கு சந்­தே­கம் ஏற்­பட்­டது. என்­னைத் திரு­ம­ணம் செய்­து­கொள்ள மறுத்­து­விட்­டார். எனவே, வாய்ப்­புக்­காக நடி­கை­களை இவ்­வாறு தொல்லை செய்­யும் வழக்­கத்­துக்கு முடி­வு­கட்ட வேண்­டும்," என்­கி­றார் தேஜஸ்வி.

கொரோனா ஊர­டங்கு தம்மை பெரி­தாக பாதிக்­க­வில்லை என்று குறிப்­பி­டு­ப­வர், இவ்­வாறு தனி­மை­யில் இருப்­பது தமக்கு பழக்­க­மான ஒன்று என்­கி­றார்.

"சிறு வய­தில் பல­முறை இவ்­வாறு தனித்து இருந்­தி­ருக்­கி­றேன். அத­னால் தனி­மையோ தனிமைப்­ப­டுத்­து­தலோ எனக்கு ஒரு பொருட்­டல்ல. சிறு வய­தில் நீண்ட காலத்­துக்கு என் குடும்­பத்­தைப் பிரிந்­தி­ருந்­தேன். இந்த ஊர­டங்கு வேளை­யில் சிறு வயது நினை­வு­களை அசை­போட்டு வருகி­றேன்.

"அதே சம­யம் குடும்­பத்தைப் பிரிந்­தி­ருப்­பதை நினைக்­கும்போது வருத்­த­மாக உள்­ளது. அதி­லும் சமூக வலைத்­த­ளங்­களில் பல­ரும் தங்­கள் குடும்­பத்­தா­ரு­டன் மகிழ்ச்­சி­யாக பொழு­தைக் கழிப்­பது குறித்து பதி­வி­டு­வ­தை­யும் புகைப்­ப­டங்­களை பகிர்­வ­தை­யும் பார்க்­கும்­போது எனக்­கும் ஏக்­க­மாக இருக்கும்.

"இந்த கால­கட்­டத்­தில் என் அம்மா அரு­கில் இல்­லா­தது மன­தில் ஒரு­வித வெறு­மையை ஏற்படுத்தி உள்­ளது. அவரை அவ்­வப்­போது கன­வில் காண்­கி­றேன். அந்­தத் தரு­ணங்­களை நினைத்­துப் பார்க்­கும்­போது மகிழ்ச்­சி­யாக இருக்­கிறது.

"அண்­மைக் கால­மாக அம்­மாவை கன­வி­லா­வது பார்க்க வேண்­டும் என்­ப­தற்­காக நிறைய நேரம் தூங்­கு­கி­றேன்," என்று ஏக்­கத்­து­டன் பேசு­கி­றார் தேஜஸ்வி.

ஊர­டங்­கின்போது சக நடி­கை­க­ளைப் போல் இவ­ரும் திரைப்­ப­டங்­கள், இணை­யத் தொடர்­களை தொடர்ந்து பார்த்து வரு­கி­றா­ராம். ஆனால் மன­தில் நேர்­மறை எண்­ணங்­களை விதைக்­கும் படைப்­பு­க­ளுக்கு மட்­டுமே முன்­னு­ரிமை அளிக்­கி­றார்.

"தற்­போது நான் செய்­தி­களைப் படிப்­ப­தில்லை. எந்­த­வொரு விஷ­யத்­தை­யும் நேர்­ம­றை­யா­கப் பார்க்க வேண்­டும். அப்­போதுதான் தன்­னம்­பிக்­கை­யு­டன் செயல்­பட முடி­யும். இல்­லை­யெ­னில் நம் மன­மும் மூளை­யும் முடங்­கி­வி­டும்," என்று பக்­கு­வ­மா­கப் பேசு­கி­றார் தேஜஸ்வி.