திட்டமிட்டுச் செயல்படும் ஷ்ருதி

திட்டமிட்டுச் செயல்படும் ஷ்ருதி

2 mins read
e82bde5e-6ffd-4d65-8c9f-45c8eab98e3f
-

நடிப்பு, இசை ஆகிய இரண்­டுமே தமக்கு முக்­கி­யம் என்று தொடர்ந்து கூறி­வந்­தா­லும் ஷ்ரு­திக்கு இசை­யின் மீதான காதல்­தான் சற்று அதி­கம் என்று தோன்­று­கிறது.

கடை­சி­யா­க தமி­ழில் 'சிங்­கம்-3' படத்­தி­லும் இந்­தி­யில் ஒரு படத்­தி­லும் நடித்­த­வரை அதன்­பி­றகு சினிமா பக்கம் பார்க்க முடி­ய­வில்லை.

கடந்த 2017ஆம் ஆண்டு அவ்­விரு படங்­களும் வெளி­யான பிறகு இசைத்­து­றை­யில்­தான் கவ­னம் செலுத்தி வரு­கி­றார் ஷ்ருதி.

லண்­ட­னில் சில இசை நிகழ்ச்­சி­களில் பங்­கேற்று அசத்­தி­ய­வர், சில தனிப் பாடல்­க­ளை­யும் வெளி­யிட்­டுள்­ளார்.

"நான் நடிப்­ப­தி­ல் இ­ருந்து திட்­ட­மிட்டு ஒதுங்கி நிற்­ப­தாக சிலர் கரு­து­கி­றார்­கள். அது உண்­மை­யல்ல. நன்கு திட்­ட­மிட்டே எனது நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கி­றேன்.

"நடிப்­புத் துறை­யில் எனக்­கான இடத்­தைப் பெறு­வ­தற்கு உண்­மை­யில் சிர­மப்­பட்­டேன். தொடக்­கத்­தில் வணிகப் படங்­களில் நடித்­த­போது அது இனிய அனு­ப­வ­மாக இருந்­தது.

"அதன்­பி­றகு அத்­த­கைய படங்­க­ளின் மீதான ஆர்­வம் குறைந்­தது. அத­னால் சற்றே பின்­வாங்கி என்னை நானே எடை­போட்­டுக் கொண்­டேன். அத­னால் சில இடை­வெ­ளி­கள் ஏற்­பட்­டன," என்­கி­றார் ஷ்ரு­தி­ஹா­சன்.

ஒரு நடி­கை­யாக தமக்­குச் சில விஷ­யங்­கள் திருப்­தி­ அளித்­த­தாக குறிப்­பிட்­டுள்ள அவர், நடிப்­பின் மூலம் லட்­சக்­க­ணக்­கான மக்­களைச் சென்­ற­டைந்­தி­ருப்­பது உற்­சா­க­ம் அளிப்­ப­தாகக் கூறு­கி­றார்.

"லட்­சக்­க­ணக்­கான ரசி­கர்­கள் முன்­னி­லை­யில் நான் முன்­னேற்­றம் கண்­டுள்­ளேன்.

"நிறைய விஷ­யங்­க­ளைக் கற்­றுக்கொண்­டி­ருக்­கி­றேன்," என்று சொல்­லும் ஷ்ருதி, தற்போது தமி­ழில் விஜய் சேதுப­தி­யு­டன் 'லாபம்' படத்­தி­லும் தெலுங்­கில் ரவிதேஜா வுடன் 'கிராக்' என்ற படத்­தி­லும் நடித்­துக்கொண்டி­ருக்­கி­றார். இரண்டுமே வணி­கப் படங்­கள்­தான்.

"மீண்­டும் வணி­கப் படங்­களில் நடிக்­கத் தொடங்­கி­யி­ருப்­ப­தில் எந்தத் தவ­றும் இல்லை என்றே நினைக்­கி­றேன்.

"மீண்­டும் நடிப்­பது உற்­சா­க­ம­ளிக்­கிறது. எனது இசைப்­ப­ணி­யும் ஒரு­சேர நடை­பெ­றும்," என்­கி­றார் ஷ்ருதி ஹாசன்.