கீர்த்தி: தாயாக நடிக்கத் தயங்கவில்லை

கீர்த்தி: தாயாக நடிக்கத் தயங்கவில்லை

1 mins read
3457a88a-7b83-4990-a0ad-049dfcbe7fb7
-

அறிமுக இயக்குநரான ஈஸ்வர் கார்த்திக் 'பென்குயின்' கதையை கீர்த்தி சுரேசிடம் நான்கரை மணி நேரம் விவரித்தாராம்.

அவர் கதை சொன்ன விதமும் நேர்த்தியும் தம்மை வெகுவாகக் கவர்ந்தது என்கிறார் கீர்த்தி. அதனால்தான் அப்படத்தில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டாராம்.

"10 படங்களில் பணியாற்றியது போன்ற அனுபவத்தை ஈஸ்வரிடம் கண்டேன். என்னிடம் சொன்ன கதையை அப்படியே படமாக்கி உள்ளார். அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

"கதை கேட்டபோது எனக்கு அம்மா வேடத்தில் நடிப்பது குறித்து தயக்கம் ஏதும் ஏற்படவில்லை. ஏன் அப்படியொரு வேடத்தில் நடிக்கக் கூடாது என்ற எண்ணம் மனதில் தோன்றியது.

"நான் ஒன்றும் 15 வயது சிறுவனுக்குத் தாயாக நடிக்கவில்லை. சின்னக் குழந்தைக்குத்தான் தாயாக நடித்துள்ளேன். அது எனக்குப் பெரிதாகத் தோன்றவில்லை," என்கிறார் கீர்த்தி சுரேஷ்.