சிலர் தாங்கள் வாழும் மதிப்புமிக்க ஆண்டுகளை இழந்துவிட்டு இறப்பில் அமைதியைத் தேடுகின்றனர் என்கிறார் அமலாபால்.
அப்படிப்பட்டவர்கள் ஏன் வாழும் காலத்தில் அமைதியாக நிம்மதியாக இருக்க முயற்சிப்பதில்லை? என சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தம் உயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல் வெளியான ஒருசில மணி நேரத்தில் அமலா இவ்வாறு பதிவிட்டுள்ளார். எனவே, சுஷாந்த் சிங்கின் முடிவை விமர்சித்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டதாகக் கருதப்படுகிறது.
"இந்த உலகம் அழகானது. உங்களுக்காக நிறைய செய்யவேண்டும் என காத்திருக்கிறது," என்று அமலா மேலும் தெரிவித்துள்ளார்.

