மும்பை: சக நடிகர்கள் தம்மை புறக்கணித்ததாலும் புதுப்பட வாய்ப்புகள் தடுக்கப்பட்டதாலும்தான் இளம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக நடிகர் சல்மான் கான், கரண் ஜோஹர், ஏக்தா கபூர், சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட 8 இந்தித் திரையுலக பிரபலங்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வழக்கறிஞர் சுதீர் குமார் என்பவர் வழக்கு தொடுத்துள்ளார்.
இதையடுத்து இந்த எட்டு பேருக்கும் எதிராக சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பதிவிட்டு வருகின்றனர். மேலும் பாட்னா உள்ளிட்ட சில நகரங்களில் சல்மான் கான், கரண் ஜோஹரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.

