மீண்டும் திரையுலகில் அடியெடுத்துவைக்கும் கல்யாணி

2 mins read
fb9e7482-608c-401f-a198-97bafbacac88
நடிகை கல்­யாணி. படம்: ஊடகம் -
multi-img1 of 3

பாலி­யல் சீண்­டல்­கள் கார­ண­மா­கவே திரை­யு­லகை விட்டு வெளி­யே­றி­ய­தாக அண்­மை­யில் தெரி­வித்­தி­ருந்­தார் நடிகை கல்­யாணி.

குழந்தை நட்­சத்­தி­ர­மாக கோடம்­பாக்­கத்­தில் அறி­மு­க­மாகி பின்­னர் தொலைக்­காட்சி தொடர்­களில் நடித்து, சில நிகழ்ச்­சி­க­ளைத் தொகுத்து வழங்கி பிர­ப­ல­மா­னார் கல்­யாணி. பின்­னர் திரு­ம­ணம் செய்­து­கொண்டு கண­வ­ரு­டன் இங்­கி­லாந்­தில் வசித்து வரு­கி­றார்.

இந்­நி­லை­யில் திரை­யு­ல­கில் மீண்டும் காலடி எடுத்துவைக்கவும் மீண்­டும் சென்­னை­யில் குடி­யே­ற­வும் திட்­ட­மிட்­டுள்­ளா­ராம்.

"குழந்தை நட்­சத்­தி­ர­மாக இருந்­த ­வரை எல்­லாமே விளை­யாட்­டா­கப் போனது. திடீ­ரென ஒரு நாள் நீங்­கள்­தான் கதா­நா­யகி என்று சொல்­லிக்­கொண்டு சிலர் வந்­த­னர். அங்­கி­ருந்­து­தான் வினை ஆரம்­ப­மா­னது.

"'ஆகா, நாமும் கதா­நா­ய­கி­யாகி விட்­டோம்' என்று மகிழ்ச்­சி­யு­டன் நடிக்­கத் தொடங்­கி­ய­போது படப்­பி­டிப்­பில் ஒரு மாதி­ரி­யான கோணத்­தில் காட்­சி­க­ளைப் பட­மாக்­கி­னர்.

"அந்த முதல் படம் வெளி­யாகி திரை­யில் என்­னைப் பார்த்­த­போது, வேறு மாதி­ரி­யாக வெளிப்­ப­டுத்தி இருந்­த­னர். சினி­மா­வில் இப்­ப­டிக்­கூட செய்­வார்­களா என்று யோசித்­தேன்," என்­கி­றார் கல்­யாணி.

அதன்­பி­றகு பெரிய நிறு­வ­னத்­தின் படம் என்று அணு­கிய ஒரு­வர் வாய்ப்­புக்­காக கொஞ்­சம் அனு­ச­ரித்­துப் போக­வேண்­டும் என்­றா­ராம். அதன் அர்த்­தம் தெரிய வந்­த­போது அப்­படி ஒரு வாய்ப்பே வேண்­டாம் என்று தொலைக்­காட்சி பக்­கம் சென்­ற­தா­கச் சொல்­கி­றார் கல்­யாணி.

ஆனால், ஒரு தொலைக்­காட்சி நிறு­வ­னத்­தின் பெரிய அதி­கா­ரி­க­ளும்­கூட இதே­போன்று தொல்லை கொடுத்­தி­ருக்­கி­றார்கள். அந்த நேரத்­தில்­தான் கல்­யா­ணி­யின் கண­வ­ருக்கு இங்­கி­லாந்­தில் வேலை கிடைத்­தி­ருக்­கிறது.

'தொலைக்­காட்­சி­யும் சினி­மா­வும்­தான் முக்­கி­யம் என்­றால் இங்­கேயே இருந்­து­விடு' என்று கறா­ரா­கக் கூறிய கண­வர் தான் மட்­டுமே இங்­கி­லாந்து செல்­வ­தற்­கும் தயா­ராக இருப்­ப­தா­கத் தெரி­வித்­தா­ராம்.

"உடனே என் கண­வர் தனி­யா­கச் சமைத்து சாப்­பிட்டு சிர­மப்­ப­டு­வது போன்ற ஒரு காட்சி மன­தில் ஓடி­யது. இங்கே தவ­றாக என்னை அணு­கும் ஒவ்­வொ­ரு­வ­ரி­ட­மும் என்­னால் அனு­ச­ரித்­துப் போக முடி­யாது என்று சொல்லி சமா­ளிப்­ப­தற்­குப் பதி­லாக, குடும்ப வாழ்க்­கையை அனு­ப­விக்­க­லாம் என்று முடிவு செய்து கண­வ­ரு­டன் நானும் இங்­கி­லாந்து புறப்­பட்டு விட்­டேன்," என்­கி­றார் கல்­யாணி.

அனு­ச­ரித்­துப் போக­மு­டி­யுமா என்று தம்­மி­டம் கேட்­ட­வர்­க­ளின் பெயர்­களை வெளி­யி­டு­வ­தில் தமக்கு எந்­த­வி­தப் பிரச்­சி­னையோ, பயமோ இல்லை என்று குறிப்­பிட்­டுள்ள அவர், இந்த விஷ­யத்­தில் தமது குடும்­பத்­தார் ஆத­ர­வாக இருப்­ப­தா­க­வும் சொல்­கி­றார்.

"நான் வெளி­யி­டும் தக­வல்­க­ளால் என் குடும்ப வாழ்க்­கை­யில் எந்­த­வித தாக்­க­மும் ஏற்­ப­டாது. ஆனால். சம்­பந்­தப்­பட்ட நபர்­க­ளுக்கு மனைவி, குழந்­தை­கள் உள்­ள­னர்.

"அவர்­கள் என்ன தவறு செய்­தார்­கள்? அவர்­க­ளு­டைய வாழ்க்­கை­யும் சேர்ந்து பாதிக்­கப்­ப­டுமே என்­ப­தால்­தான் சில தக­வல்­களை, பெயர்­களை வெளி­யிட வேண்­டாம் என முடிவு செய்­தேன்.

"எனது இந்­தப் பேட்­டி­யைப் படிக்­கும்­போது சம்­பந்­தப்­பட்ட நபர்­க­ளுக்கு உறுத்­தும் அல்­லவா? அதுவே எனக்­குப் போதும்," என்று சொல்­லும் கல்­யாணி விரை­வில் சென்­னை­யில் குடி­யேற இருப்­ப­தா­கக் குறிப்­பி­டு­கி­றார்.

மீண்­டும் தொலைக்­காட்சி, திரைப்படம் என்று வலம்­வர விரும்­பு­கி­றா­ராம்.

"ஒரு பணிக்­காக வெளி­நாடு சென்­ற­தால் அங்­கேயே இருந்­து­விட முடி­யுமா? பெற்­றோர், உற­வி­னர் என்று எல்­லோ­ரும் இங்­கே­தானே உள்ளனர். அடுத்­த­டுத்து புது வாய்ப்­புகளை உரு­வாக்கி நகர்­வ­து­தானே வாழ்க்கை? இனி­யே­னும் கசப்­பான அனு­ப­வங்­கள் திரும்­பாது என நம்புகிறேன்," என்­கி­றார் கல்­யாணி.