கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் சந்தானம் இணைந்துள்ள படம் 'டிக்கிலோனா'

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் சந்தானம் இணைந்துள்ள படம் 'டிக்கிலோனா'

1 mins read
4db26a35-5dd5-42f2-bbfb-f4d6296d9ddf
-

நாயகன், வில்லன், நகைச்சுவை கதாபாத்திரம் என சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் 'டிக்கிலோனா' வெளியீடு காண கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. இதன் அண்மைய சுவரொட்டி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அறிவியல் கற்பனையும் நகைச்சுவையும் கலந்த படைப்பாக உருவாகியுள்ள 'டிக்கிலோனா'வுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'நட்பே துணை' அனகா மற்றும் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' ஷிரின் ஆகியோர் நாயகிகளாக நடிக்க, யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், நிழல்கள் ரவி, சித்ரா லெட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என்று பெரும் நகைச்சுவைப் பட்டாளமும் களமிறங்கி இருக்கிறது.