அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் 'பெண்குயின்'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். முதன் முறையாக கர்ப்பிணிப் பெண்ணாக நடித்துள்ளார் கீர்த்தி. இந்தப் படமும் அவருக்கு விருதுகளைப் பெற்றுத் தரும் எனப் படக்குழு நம் பிக்கை தெரிவித்துள்ளது. அந்தளவுக்கு சிறப்பாக நடித்துள்ளாராம். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும், மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டும், இன்று (ஜூன் 19) அமேசான் பிரைம் மின்னியல் தளத்தில் வெளியாகிறது. அதிரடி, காதல், நகைச்சுவை அத்தனையும் கலந்த படமாக உருவாக்கப்பட்டுள்ளதாம் இந்தப் படம். சைமன் கிங் இசையமைத்துள்ள 'பெண்குயின்' ரசிகர்களை வியக்கவைக்கும் அதிரடித் திருப்பங்களைக் கொண்டதாக இருக்கும் என்று கூறுகிறார் படத்தின் இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக்.
மின்னியல் தளத்தில் இன்று (ஜூன் 19) வெளியாகிறது 'பெண்குயின்'
1 mins read
கீர்த்தி சுரேஷ். படம்: ஊடகம் -

