‘முற்றிலும் மாறுபட்ட படம் - ராஜபீமா’

நரேஷ் சம்­பத் இயக்­கத்­தில் ஆரவ் நாய­க­னாக நடிக்­கும் படம் ‘ராஜ­பீமா’. கேர­ளா­வில் பழத்­துக்­குள் வெடி­ம­ருந்து வைத்து ஒரு யானை கொடூ­ர­மாக கொல்­லப்­பட்ட சூழ்­நி­லை­யில் யானையை மையப்­படுத்தி உரு­வாகி உள்­ளது இப்­ப­டம்.

யானை நடிப்­ப­தால் விக்­ரம் பிரபு­வின் ‘கும்கி’யைப் போல் இருக்­குமா? என்று பல­ரும் கேட்­கி­றார்­க­ளாம். ஆனால் இரு படங்­க­ளுக்­கும் துளி­யும் சம்­பந்­த­மில்லை என்­கி­றார் நரேஷ் சம்­பத்.

“எம்­ஜி­ஆர் நடித்த ‘நல்ல நேரம்’, ரஜி­னி­யின் ‘அன்னை ஓர் ஆல­யம்’, கமல்­ஹா­ச­னின் ‘ராம் லட்­சு­ம­ணன்’ல் இருந்து ‘கும்கி’ வரை தமிழ் சினிமாவில் அவ்­வப்­போது யானையை மையப்­ப­டுத்தி படங்­கள் வெளி­யாகி வெற்றி பெற்­றுள்­ள­தைச் சுட்­டிக் காட்­டு­ப­வர், ‘ராஜ­பீமா’ அவற்­றி­லி­ருந்து முற்­றி­லும் மாறு­பட்­ட­தாக இருக்­கும்,” என்­கி­றார்.

கொரோனா ஊர­டங்­குக்கு முன்பே இப்­ப­டத்­தின் பணி­கள் முடிந்­து­விட்­ட­ன­வாம். வெளி­யீடு காணும் நேரத்­தில் ஊர­டங்கு கார­ண­மாக எல்­லாம் தாம­த­மாகி விட்­ட­தாம்.

“ஒட்­டு­மொத்த படக்­கு­ழு­வும் படத்­தைப் பார்த்­தா­கி­விட்­டது. எங்­க­ளைப் பொறுத்­த­வரை எந்­த­வி­தக் குறை­யும் இல்­லா­மல் படம் உரு­வாகி உள்­ளது. தொழில்­நுட்ப ரீதி­யில் சிறு பணி­கள் மீத­முள்­ளன. ஊர­டங்கு முடிந்­த­தும் படம் திரை­கா­ணும்,” என்று சொல்­லும் நரேஷ் சம்­பத், ஒரு படத்­தின் வெற்­றி­யில் அதன் தலைப்­புக்­கும் பங்­குள்­ளது என்று உறு­தி­யாக நம்­பு­கி­றா­ராம்.

அத­னால் பல நாட்­கள் தீவி­ர­மாக யோசித்து ‘ராஜ­பீமா’ என்ற தலைப்பை உறுதி செய்­தா­ராம். இது முழு­நீள பொழு­து­போக்­குச் சித்­தி­ர­மாக உரு­வாகி உள்­ளது.

“நகைச்­சுவை, காதல், குடும்ப உணர்­வு­கள் என்று சினி­மா­வுக்­குரிய அனைத்து அம்­சங்­க­ளை­யும் குறை­வின்றி இடம்­பெ­றச் செய்­தி­ருக்­கி­றார்­கள்.

“அதே­ச­ம­யம் இது காதலை மையப்­ப­டுத்தி பின்­னப்­பட்ட கதை அல்ல. எல்லா அம்­சங்­களும் அள­வோ­டு­தான் இருக்­கும்.

“மேலும் சமூ­கத்­துக்­குத் தேவை­யான சில நல்ல கருத்­து­களும் நிச்­ச­யம் இருக்­கும். அது என்ன என்­பதை இப்­போதே சொல்­லி­விட்­டால் சுவா­ர­சி­யம் போய்­வி­டும்,” என்­கி­றார் நரேஷ்.

கதைப்­படி கதா­நா­ய­கன் தன் வீட்­டி­லேயே ஒரு யானையை வளர்ப்­பா­ராம். மனி­த­னை­யும் விலங்­கை­யும் உணர்­வுபூர்­வ­மாக இணைக்­கும் புள்­ளி­தான் இப்­ப­டத்­தின் மையக்­க­ரு­வாம்.

“யானைக்­கும் ஆரவ்­வுக்­கும் இடை­யே­யான காட்­சி­கள் அரு­மை­யாக வந்­துள்­ளன. இந்­தக் கதையை எழு­தும்­போதே ஆரவ்­தான் என் மன­தில் இருந்­தார். எங்­கள் இரு­வ­ருக்­கும் இடையே நல்ல புரிந்துணர்வு உள்ளது. இன்­று­வரை என் எதிர்­பார்ப்­புக்கு ஏற்ப நடந்­து­கொள்­கி­றார்.

“தாய்­லாந்­தில்­தான் யானை சம்­பந்­தப்­பட்ட காட்­சி­களை எடுத்­தோம். படப்­பி­டிப்பு துவங்­கு­வ­தற்கு முன்பு யானை­யு­டன் எப்­ப­டிப் பழ­க­வேண்­டும் என்று முறை­யா­கப் பயிற்சி எடுத்­துக்­கொண்­டார் ஆரவ்,” என்று பாராட்­டு­கி­றார் நரேஷ் சம்­பத்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!