பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்

பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்

1 mins read
7a397dbd-573b-4322-bf31-49333f5ed231
நடிகை எம்.என்.ராஜத்தின் கணவரும் பிரபல பாடக ருமான ஏ.எல்.ராகவன் நேற்று காலமானார்.'ஆதர்ச தம்பதி' என்று திரையுலகில் புகழப்பட்ட வர்கள் இவர்கள்.படம்: ஊடகம் -

சென்னை: பழம்­பெ­ரும் திரைப்­ப­டப் பின்னணிப் பாட­கர் ஏ.எல்.ராக­வன், மார­டைப்பு கார­ண­மாக நேற்று கால­மா­னார். அவ­ருக்கு வயது 87.

சென்னை ராயப்­பேட்­டை­யில் வசித்து வந்த அவ­ருக்கு நேற்று காலை நெஞ்சு வலி ஏற்­பட்­டது. உட­ன­டி­யாக அவரை சென்­னை­யில் உள்ள ராம­சந்­திரா மருத்­துவ மனைக்கு சிகிச்­சைக்­காக கொண்டு சென்­ற­னர்.

எனி­னும், சிகிச்சை பல­னின்றி நேற்று காலை அவர் கால­மா­னார்.

திரையுலகினர் பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரி வித்து வருகின்றனர்.

இவ­ரது மனைவி நடிகை எம்.என். ராஜம். இவர் பல்­வேறு படங்­களிலும் நடித்து புகழ்பெற்­ற­வர்.

ஏ.எல். ராக­வன் தமிழ், தெலுங்கு, கன்­ன­டத்­தில் ஆயி­ரக்­க­ணக்­கான பாடல்­களைப் பாடி­யுள்­ளார்.

1950கள் முதல் 1970கள் வரை தமிழ்­த் தி­ரைப்­படப் பாடல்­களில் கொடிகட்­டிப் பறந்­த­வர் ராக­வன்.

1947ஆம் ஆண்டு 'கிருஷ்ண விஜ­யம்' என்ற படத்தின் மூலம் நடி­க­ராக சினி­மா­வுக்கு வந்­த­வர் இவர். 1950ல் வெளி­வந்த 'விஜ­ய­குமாரி' என்ற படத்­துக்­காக ஒரு பாடலைப் பாடி­னார்.

நெஞ்­சில் ஓர் ஆல­யம் படத்­தில் 'எங்­கி­ருந்­தா­லும் வாழ்க' போன்ற காலத்­தால் அழி­யாத பல பாடல்­க­ளை­யும் இவர் பாடி இருக்­கி­றார்.

அத்துடன், 'பொம்­பளை ஒருத்தி இருந்­தா­ளாம்', 'சீட்­டுக்­கட்டு ராஜா', 'என்ன வேகம் நில்லு பாமா', 'அங்­க­முத்து தங்­க­முத்து' உள்­பட பல முத்தான பாடல்­களைப் பாடி­யுள்­ளார்.

கடை­சி­யாக கடந்த 2014ஆம் ஆண்டு 'ஆடாம ஜெயிச்­சோ­மடா' என்ற படத்­துக்­காக ஷான் ரோல்­டன் இசை­யில் பாடி­யி­ருந்­தார்.

இசையமைப்­பா­ளர்­கள் எம்.எஸ்.விஸ்­வ­நாதன், கே.வி.மகா­தே­வன், எஸ்.எம்.சுப்­பையா நாயுடு ஆகி­யோர் இவ­ருக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்­கி­னர்.