'தமிழரசன்' - கிரிக்கெட் வீரராக விஜய் ஆண்டனி

1 mins read
596b0e10-5b3c-4460-baa2-5302757003dc
ரம்யா நம்பீசன், விஜய் ஆண்டனி. படம்: ஊடகம் -

'தமிழரசன்' படத்தில் கிரிக்கெட் வீரராக நடித்துள்ளாராம் விஜய் ஆண்டனி. பாபு யோகேஸ்வரன் இயக்கும் இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் 'தமிழரசன்' புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் விஜய் ஆண்டனி. அவற்றில் அவர் கிரிக்கெட் வீரருக்கான உடையை அணிந்துள்ளார். கதைப்படி இவர் தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் தலைவராகவும் இந்தி நடிகர் சோனு சூட் டெல்லி கிரிக்கெட் அணியின் தலைவராகவும் நடித்துள்ளனராம். இரு மாநிலங்களுக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டி, போராட்டம்தான் இப்படத்தின் கதை எனக் கூறப்படுகிறது.