பாசம் காட்டி பராமரிக்கும் திரிஷா

பாசம் காட்டி பராமரிக்கும் திரிஷா

1 mins read
a9841bfc-75d0-40d9-8f52-d07d433223be
நடிகை திரி‌ஷா உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்ல முடியாததால் வீட்டிலேயே சில மணி நேரம் உடற்பயிற்சி செய்து உடம்பைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்கிறாராம். அத்துடன் தன் வீட்டுச் செல்லப் பிராணிகளையும் தெருக்களில் திரியும் செல்லப்பிராணிகளையும் பாசத்துடன் பராமரித்து வருகிறாராம். படம்: ஊடகம் -

கடந்த 80 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு நீடித்ததால், வீட்டிலேயே முடங்கி இருப்பது வருத்தமளிப்பதாக கூறியுள்ளார் திரிஷா.

இரண்டு நாய்க்குட்டிகளை வளர்த்துவரும் இவருக்குச் செல்லப் பிராணிகள் மீது மிகுந்த பாசம் உண்டு. தன் வீட்டிலுள்ள செல்லப் பிராணிகளைத் தவிர, தான் வசிக்கும் தெருவில் சுற்றித் திரியும் மற்ற நாய்களுக்கும் தினமும் உணவளித்து பராமரித்து வருகிறார்.

தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கமுள்ள திரிஷா, தற்போது உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்ல முடியாததால் வீட்டிலேயே சில மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறாராம். 'பரமபதம்', 'ராங்கி', 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் திரிஷா.