மோதல் முடிந்து படம் வளர்கிறது

மோதல் முடிந்து படம் வளர்கிறது

1 mins read
d3a1a1a1-3638-42e2-b625-dfdd58d89bc6
சிம்பு -

அண்மைய காலமாக சிம்பு குறித்து உற்சாகமளிக்கும் நல்ல தகவல்கள் மட்டுமே வெளிவருகின்றன.

தற்போது ஹன்சிகாவுடன் 'மஹா'விலும், வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' படத்திலும் நடித்து வருகிறார் சிம்பு.

இந்நிலையில் கன்னடத்தில் வெளியான 'முஃப்தி' படத்தின் தமிழ் மறுபதிப்பிலும் ஒப்பந்தமாகி இருந்தார். ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்தில் கௌதம் கார்த்திக்கும் இன்னொரு நாயகனாக ஒப்பந்தமானார்.

ஆனால், படப்பிடிப்பு துவங்கிய நிலையில் சிம்புவுக்கும் தயாரிப்பாளருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படம் முடங்கிப்போனது. இந்நிலையில் இருதரப்புக்கும் இடையே திடீரென சமரசம் ஏற்பட்டுள்ளதாம்.

சிம்பு சில விஷயங்களில் விட்டுக்கொடுக்க கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் மீண்டும் படப்பிடிப்பைத் துவங்க உள்ளனர். இத்தகவல் சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.