திருவனந்தபுரம்: பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் சச்சி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 48. மலையாளத்தில் பல வெற்றிப் படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார் சச்சி. இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான 'அய்யப்பனும் கோஷியும்' படம் கடந்த பிப்ரவரியில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் மாரடைப்பு காரணமாக அவர் காலமானார். அண்மையில்தான் அவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அச்சமயம் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் காலமானார். அவரது மறைவு மலையாள திரையுலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல மலையாள இயக்குநர் சச்சி மரணம்
1 mins read
-

