'உயிரைக் கொடுத்து நடிக்கும் கலைஞன்'

'உயிரைக் கொடுத்து நடிக்கும் கலைஞன்'

2 mins read
294e5824-54d8-4f7f-9d76-76f6f8bfb534
இயக்குநர் சங்கருடன் நடிகர் விக்ரம். -

'அந்­நி­யன்' திரைப்­ப­டம் வெளி­யாகி 15 ஆண்­டு­கள் நிறை­வ­டைந்­துள்ளது. இன்­ற­ள­வும் அப்­ப­டத்­தைப் பற்­றிப் பேசும்­போது உற்­சா­க­மா­கி­றார் இயக்­கு­நர் சங்­கர்.

தனது படம் வெளி­யாகி இத்­தனை ஆண்­டு­க­ளுக்­குப் பிற­கும் அது­கு­றித்­துப் பேசப்­ப­டு­வது மன நிறைவு அளிப்­ப­தாகச் சொல்­கி­றார்.

"நாட்­கள் எவ்­வ­ளவு வேகமாகக் கடந்து செல்­கின்­றன என்று நினைத்­தால் ஆச்­ச­ரி­ய­மாக உள்­ளது பொது­வாக ஒரு படத்­தின் கதையை அதன் தலைப்­பி­லேயே சொல்­ல­மு­டி­யுமா என்று பார்ப்­பேன்.

"தலைப்­பின் மூல­மாக ரசி­கர்­களை ஈர்க்­க­வேண்­டும் என்­ப­தற்­காக மெனக்­கெ­டு­வேன். ஒரு தலைப்பை எழு­து­வ­தற்­கான எழுத்து வகை­யைத் தேர்வு செய்­வ­தற்­கும்­கூட நேரம் எடுத்­துக் கொள்­வது என் வழக்­கம். 'அந்­நி­யன்' பட நாய­கன் அம்பி மென்­மை­யான மனி­தன். அந்­நி­யனோ சக்­தி­யும் வேக­மும் நிறைந்த கதா­பாத்­தி­ரம். இந்த இரண்­டை­யும் மன­திற்­கொண்டே தலைப்பை உரு­வாக்­கி­னோம்.

"'அந்­நி­யன்' கதையை சென்­னை­யில் உள்ள ஒரு தங்கு விடு­தி­யில் வைத்­து­தான் விக்­ர­முக்­குச் சொன்­னேன். ஒவ்­வொரு கதா­பாத்­தி­ரத்­தி­லும் அவர் எப்­படி நடிக்­க­வேண்­டும் என்­பது தொடர்­பான எனது எதிர்­பார்ப்­பைத் தெரி­வித்­தேன். அவ­ருக்­கான ஒப்­பனை, வசன உச்­ச­ரிப்பு ஒன்­றுக்­கொன்று எப்­படி வித்­தி­யா­சப்­படும் என்று விவ­ரித்­த­போது அவர் நிறைய கேள்­வி­க­ளைக் கேட்­ட­ப­டியே இருந்­தார். ஆனால், படப்­பி­டிப்பு துவங்­கி­ய­தும் அந்­தக் கேள்­வி­கள் மறைந்து அவ­ருக்கு எல்­லாம் தெளி­வா­னது.

"பொது­வாக ஒரு காட்சி தொடர்­பான சில விஷ­யங்­களை தனி­யாக எழுதி வைத்­து­வி­டு­வேன். அதே­ச­ம­யம் சில விஷ­யங்­கள், வச­னங்­கள் நடி­கர்­க­ளி­ட­மி­ருந்து இயல்­பாக வெளிப்­ப­டும்­போது நமக்கு ஈர்ப்­பும் சிரிப்­பும் வந்­து­வி­டும். அத்­த­கைய நகைச்­சு­வை­களை அப்­ப­டியே பயன்­ப­டுத்­திக் கொள்­வேன்," என்று சொல்­லும் சங்­கர் இந்­தப் படத்­துக்­காக விக்­ரம் வெகு­வாக மெனக்­கெட்­ட­தா­கச் சொல்­கி­றார்.

அவ­ரைப் போன்ற திற­மை­யான அர்ப்­ப­ணிப்பு உணர்­வுள்ள நடி­கர்­க­ளைப் பார்ப்­பது அரிது என்­றும் பாராட்­டு­கி­றார்.

"என்­னைப் பொறுத்­த­வரை விக்­ரம் உயி­ரைக் கொடுத்து நடித்­தார் என்­பேன். படத்­துக்­கான கதை தயா­ராகி வரும்­போதே அவரை அழைத்து, 'அடுத்த படத்­துக்­குத் தயா­ரா­வோம்; முடி வளர்க்க ஆரம்­பி­யுங்­கள்' என்று கூறி­விட்­டேன். 'அந்­நி­யன்' கதா­பாத்­தி­ர­மாக மாறும்­போது கண்­கள் இரு­பக்­க­மும் சுழற்­ற­வேண்­டும் என்று கூறி­ய­தும் அதற்­காக பயிற்சி செய்­தார். அம்­பி­யாக நடிக்­கும் காட்­சி­க­ளைப் பட­மாக்­கும்­போது உடற்­ப­யிற்சி செய்­யாதால் சற்றே தொய்­வாக வரு­வார். அந்­நி­ய­னாக நடிக்­கும்­போது கடும் உடற்­ப­யிற்சி செய்து தெம்­பாகக் காட்சி அளிப்­பார்.

"பிர­காஷ் ராஜ் அவரை விசா­ரிக்­கும் காட்சி எங்­கள் அனைவ­ருக்குமே சவா­லாக இருந்­தது. இதற்­காக தனது உடற்­ப­யிற்­சிக் கரு­வி­களை படப்­பி­டிப்­புத் தளத்­துக்­குக் கொண்­டு­வந்­தார் விக்­ரம். காட்­சிக்க நடுவே கடு­மை­யாக உடற்­ப­யிற்சி செய்­வார். இதே­போல் அம்­பி­யாக நடிக்­கும்­போது விற்­றுத் தொப்பை தெரி­ய­வேண்­டும் என்­ப­தற்­காக நிறைய தண்­ணீர் குடிப்­பார். அத­னால்­தான் சொல்­கி­றேன் விக்­ரம் உயி­ரைக் கொடுத்து நடிக்­கும் கலை­ஞன்," என்கிறார் சங்கர்.