ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ள படம் 'பாரிஸ் பாரிஸ்'. இந்தியில் வெளியான 'குயின்' படத்தின் தமிழ் மறுபதிப்பு இது. தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெவ்வேறு தலைப்புகளில் இக்கதையை மறுபதிப்பு செய்கின்றனர். கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடியே முடிவடைந்து, தற்போது தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாரிஸ், லண்டன், பார்சிலோனா உள்ளிட்ட நகரங்களில் முக்கிய காட்சிகளைப் படமாக்கி உள்ளனர். கதைப்படி விருதுநகரிலும் சில காட்சிகள் எடுக்கப்பட்டனவாம். "கதையைக் கேட்டவுடன் என் மனதில் ஒட்டிக்கொண்டது. இப்படத்தில் நடித்தது நல்ல அனுபவம்," என்கிறார் காஜல் அகர்வால்.
விரைவில் திரை காண்கிறது 'பாரிஸ் பாரிஸ்'
1 mins read
காஜல் அகர்வால்/ படம்: ஊடகம் -

