நயன்தாராவுக்கு கொரோனா? தாமாகவே தனிமைப்படுத்திக்கொண்டார்

நயன்தாராவுக்கு கொரோனா? தாமாகவே தனிமைப்படுத்திக்கொண்டார்

1 mins read
2367b873-ba96-4675-99a3-d8a513666695
தமிழ் திரையுலகில் இயக்குனர்கள் மிஷ்கின், விக்னேஷ்சிவன், நடிகை நயன்தாரா உள்லிட்ட சிலர், கொரோனா அறிகுறி தென்பட்டதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. படம்: இணையம் -

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட திரையுலகினர் சிலர் கொரோனா அறிகுறி காரணமாக தாமாகவே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனாவின் தாக்கம் சென்னையில் மிகவும் கடுமையாக இருக்கிறது. கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழநி சுற்றுவட்டார பகுதிகளில் பாதிப்பு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகில் இயக்குனர்கள் மிஷ்கின், விக்னேஷ்சிவன், நடிகை நயன்தாரா உள்லிட்ட சிலர், கொரோனா அறிகுறி தென்பட்டதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

எழும்பூரில் தனிமையில் இருப்பதாக கூறப்படும், நயன்தாரா அண்மையில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

அண்மையில் காலமான திரைப் பாடகர் ஏ.எல். ராகவனுக்கு கொரோனா கிருமித்தொற்று இருந்தது உறுதியாகியுள்ள நிலையில், அவரது மனைவி எம்.என்.ராஜத்திற்கும் கிருமித்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்