எதிர்மறை விஷயங்களில் இருந்து விலகி இருப்பதுதான் நல்லது - சோனாக்‌ஷி

எதிர்மறை விஷயங்களில் இருந்து விலகி இருப்பதுதான் நல்லது - சோனாக்‌ஷி

1 mins read
086da6c4-f5b6-4580-aebe-ee59c34c313e
சில நாட்களாக டுவிட்டர் தளத்தில் பலரும் இவரை விமர்சித்துப் பின்னூட்டமிட்டு வருகின்றனர். இதனால் எந்தப் பதிவையும் வெளியிடாமல் இருந்தார். இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தை முடக்கியுள்ளாராம் சோனாக்‌ஷி சின்ஹா. படம்: ஊடகம் -

நமது மனநலனைக் காப்பதற்கான முதல் அடி, எதிர்மறை விஷயங்களில் இருந்து விலகி இருப்பதுதான் என்று கூறுகிறார் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா.

சில நாட்களாக டுவிட்டர் தளத்தில் பலரும் இவரை விமர்சித்துப் பின்னூட்டமிட்டு வருகின்றனர். இதனால் எந்தப் பதிவையும் வெளியிடாமல் இருந்தார். இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தை முடக்கியுள்ளாராம் சோனாக்‌ஷி.

"கொரோனா ஊரடங்கு வேளையில் நம்மில் பெரும்பாலானோர் டுவிட்டரில்தான் அதிகம் காணப்படுகிறோம். எனினும் எனது கணக்கை தற்போது செயலிழக்கச் செய்கிறேன். போய் வருகிறேன் மக்களே," என்று தமது இறுதிப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் சோனாக்‌ஷி.

மேலும் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பின்னூட்டம் இடுவதற்கான வசதியையும் முடக்கியுள்ளார்.

"தீ பற்றி எரியட்டும். எனக்குக் கவலை இல்லை," என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.