விஜய் பிறந்த நாள்: குவிந்தன வாழ்த்துகள்

விஜய் பிறந்த நாள்: குவிந்தன வாழ்த்துகள்

3 mins read
e3f43326-2d64-4ba6-a1d5-a1037eb3345a
'மாஸ்­டர்' படக்­குழு வெளி­யிட்ட புதிய சுவ­ரொட்டி ரசி­கர்­க­ளுக்கு ஆறு­த­லாக அமைந்த நிலை­யில் திரை­யு­ல­கப் பிர­ப­லங்­கள் பல­ரும் விஜய்யை வாழ்த்து மழை­யில் நனைய விட்­டுள்­ள­னர். படம்: ஊடகம் -

பெரிய கொண்­டாட்­டங்­கள் வேண்­டாம் என்று விஜய் கூறி­விட்­ட­தால் அவ­ரது பிறந்­த­நா­ளின்­போது ரசி­கர்­கள் சற்றே அடக்கி வாசித்­துள்­ள­னர்.

'மாஸ்­டர்' படக்­குழு வெளி­யிட்ட புதிய சுவ­ரொட்டி ரசி­கர்­க­ளுக்கு ஆறு­த­லாக அமைந்த நிலை­யில் திரை­யு­ல­கப் பிர­ப­லங்­கள் பல­ரும் விஜய்யை வாழ்த்து மழை­யில் நனைய விட்­டுள்­ள­னர்.

முன்­ன­தாக விஜய் ரசி­கர் மன்­றத்­தின் சார்­பாக அண்­மை­யில் எல்­லைப் பகு­தி­யில் சீனா­வு­ட­னான மோத­லில் வீர­ம­ர­ணம் அடைந்த தமி­ழக வீரர் பழ­னி­யின் குடும்­பத்­தா­ருக்கு ஒரு லட்­சம் ரூபாய் நிதி வழங்­கப்­பட்­டது.

'மாஸ்­டர்' படத்­துக்­காக தாம் விஜய்­யு­டன் பணி­யாற்­றிய ஒவ்­வொரு தரு­ண­மும் வாழ்­நாள் முழு­வ­தும் மறக்க முடி­யா­தது என்று அதன் இயக்­கு­நர் லோகேஷ் கன­க­ராஜ் டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்­ளார்.

"விஜய் அண்­ணா­வு­டன் பணி­யாற்­றிய குறிப்­பிட்ட ஒரு நாளை மட்­டும் சிறப்­பா­னது என்று என்­னால் கூற இய­லாது. அவ­ரு­டன் செல­விட்ட ஒவ்­வொரு தரு­ண­மும் மறக்க இய­லா­தது.

"வாழ்­நாள் முழு­வ­தும் அதை நினைத்து மகிழ்­வேன். இதைச் சாத்­தி­ய­மாக்­கி­ய­தற்கு நன்றி அண்ணா. உங்­களை மிக­வும் நேசிக்­கி­றேன்," என லோகேஷ் கன­க­ராஜ் தெரி­வித்­துள்­ளார்.

இயக்­கு­நர் அட்லி விஜய்­யைத் தனது தள­பதி என்று குறிப்­பிட்­டுள்­ளார். 'தெறி', 'மெர்­சல்', 'பிகில்' என விஜய்யை அடுத்­த­டுத்து இயக்­கி­ய­வர் அட்லி.

"நீங்­கள்­தான் எனது அண்­ணன், எனது தள­பதி. என்­னை­விட உங்­க­ளைத்­தான் நான் அதி­கம் நேசிக்­கி­றேன், மதிக்­கி­றேன். உங்­க­ளுக்கு நிறைய கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன். நீங்­கள் இல்­லா­மல் நான் இல்லை. பிறந்­த­நாள் வாழ்த்­து­கள் அண்ணா," என்று குறிப்­பிட்டு 'பிகில்' படப்­பி­டிப்­பின்­போது எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டம் ஒன்­றை­யும் அட்லி தமது பதி­வில் பகிர்ந்­துள்­ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் டுவிட்­ட­ரில் வித்­தி­யா­ச­மான முறை­யில் விஜய்க்கு வாழ்த்­துத் தெரி­வித்­துள்­ளார்.

கீர்த்­திக்கு நன்­றாக வய­லின் வாசிக்­கத் தெரி­யும். இதை­ய­டுத்து 'மாஸ்­டர்' படத்­தில் இடம்­பெற்­றுள்ள 'குட்டி ஸ்டோரி' பாடலை வய­லி­னில் வாசித்து அதை சமூக வலைத்­த­ளத்­தில் வெளி­யிட்டு தனது வாழ்த்தை அவர் பதிவு செய்­துள்­ளார்.

'மாஸ்­டர்' படத்­தில் விஜய்­யு­டன் இணைந்து நடித்­துள்ள நடிகை மாள­விகா மோக­னன் விஜய்­யைப் போல் இன்­னொ­ரு­வர் உரு­வா­கவே முடி­யாது என தெரி­வித்­துள்­ளார்.

'மாஸ்­டர்' பட பூசை­யின்­போ­து­தான் விஜய்யை முதன்­மு­த­லில் சந்­தித்­த­தா­க­வும் அன்று அவ­ரு­டன் பேச­மு­டி­ய­வில்லை என்­றும் மாள­விகா தமது இன்ஸ்­ட­கி­ராம் பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"அந்­தப் பூசைக்­குப் பின் வந்த ஆறு மாதங்­களில் விஜய் சார் என் வாழ்­வில் முக்­கி­ய­மான அங்­க­மாக மாறு­வார் என நான் எதிர்­பார்க்­கவே இல்லை. அவர் புதிய விஷ­யங்­க­ளைத் தெரிந்து கொள்­வ­தில் ஆர்­வ­மிக்­க­வர். முடிந்­த­வரை வித்­தி­யா­ச­மான முயற்­சி­களை மேற்­கொள்­வார்.

"அன்­பா­ன­வர், தயிர்­சாத விரும்பி. காலை நான்கு மணிக்­கெல்­லாம் எழுந்து பணி­க­ளைக் கவ­னிக்­கி­றார். உல­கமே அழிந்­து­கொண்­டி­ருந்­தா­லும் நேர்­ம­றை­யான ஒரு பக்­கத்தை சுட்­டிக் காட்­டக் கூடி­ய­வர். குறை­வாக பேசக்­கூ­டிய மனி­தர் என்­றா­லும் விஜய் சாரைப் போல் சொன்ன வார்த்­தை­க­ளை­யும் கொடுத்த வாக்­கு­க­ளை­யும் நினை­வில் வைத்­தி­ருந்து நிறை­வேற்­றும் ஒரு­வரை நான் இது­வரை பார்த்­த­தில்லை.

"இனி­மேல் இப்­படி ஒரு­வர் உரு­வா­கவே முடி­யாது என்ற வகை­யைச் சார்ந்த தள­ப­திக்கு என் பிறந்­த­நாள் வாழ்த்­து­கள்," என மாள­விகா தெரிவித்துள்­ளார்.

இயக்­கு­நர் பார­தி­ரா­ஜா­வும் விஜய்க்கு வாழ்த்து தெரி­வித்­துள்­ளார். தமது கலைப் பய­ணத்­தில் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக தாம் தவிர்த்த ஒரு விதை என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"வலி­களை வலி­மை­யாக்கி தமி­ழ­கத்­தின் இளைஞர்­க­ளின் சொத்­தாக உல­கமே கொண்­டா­டும் விஜய்க்கு இனிய பிறந்­த­நாள் வாழ்த்­து­கள்.

"காத­லா­கட்­டும் நடுத்­தர குடும்ப கதா­பாத்­தி­ர­மா­கட்­டும் நையாண்டி, நக்­க­லுக்­கான அந்த உடல் பாவனை, நட­னத்­தின் நளி­னம், சண்­டைக்­காட்­சி­கள், அதி­லும் கோடிக்­க­ணக்­கான ரசி­கர்­களை உல­கம் முழு­வ­தும் ஈர்த்து வைத்­தி­ருக்­கின்ற, வெற்­றி­யின் 'V' என்­பதை தமது பெய­ரின் முதல் எழுத்­தா­கக் கொண்ட விஜய்க்கு 46ஆவது பிறந்த நாளில் நீடூழி வாழ பாசத்­து­டன் வாழ்த்துகிறேன்," என்று பார­தி­ராஜா குறிப்­பிட்­டுள்­ளார்.