'இணைய வெளியீடு காலத்தின் கட்டாயம்'

'இணைய வெளியீடு காலத்தின் கட்டாயம்'

3 mins read
45aae75d-9c92-4ef8-ad2c-b94e9bcf87d7
தமி­ழில் அண்­மைக் காலத்­தில் இதற்­கான முதல் அடியை எடுத்து வைத்­த­வர் சூர்யா. ஜோதிகா நடித்த 'பொன்­ம­கள் வந்­தாள்' படத்தை கடும் எதிர்ப்­புக்கு மத்­தி­யில் நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யிட்­டார் அவர். படம்: ஊடகம் -
multi-img1 of 3

மின்­னி­லக்க தளங்­களில் புதுப்­படங்களை நேர­டி­யாக வெளி­யி­டு­வ­தற்கு திரை­யங்க உரி­மை­யா­ளர்­களும் விநி­யோ­கிப்பாளர்­களும் கடும் எதிர்ப்பு தெரி­வித்துள்ளனர்.

எனி­னும் பாலி­வுட் தொடங்கி கோடம்­பாக்­கம் வரை இந்த நடை­மு­றைக்கு ஆத­ரவு தெரி­விப்­போ­ரின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்து வரு­கிறது.

கடந்த சில ஆண்­டு­க­ளுக்கு முன்பே வீட்­டுக்கு வீடு புதுப்­ப­டங்­க­ளைக் கொண்டு சேர்க்­கும் வித­மாக 'டைரக்ட் டு ஹோம்' என்ற முறையை அறி­மு­கப்­ப­டுத்­தும் யோச­னையை முன்­வைத்­தார் கமல்­ஹா­சன்.

'விஸ்­வ­ரூ­பம்' படத்தை இத்­த­கைய முறை­யில் வெளி­யி­ட­வும் அவர் விரும்­பி­னார். ஆனால் கடும் எதிர்ப்பு கிளம்­பி­ய­தால் அப்­போது முயற்சி கைகூ­ட­வில்லை.

அதன் பிறகு இயக்­கு­நர் சேரன் கூட புது­மு­யற்­சி­யில் ஈடு­பட முயன்று சங்­க­டங்­க­ளைச் சந்­தித்­தார். ஆனால், கொரோனா ஊர­டங்கு என்­பது நிலை­மை­யில் மாற்­றத்­தைக் கொண்டு வந்­துள்­ளது.

பல மாதங்­க­ளாக திரை­ய­ரங்­கு­கள் மூடப்­பட்­டுள்­ளன. இத­னால் ஒட்­டு­மொத்த உல­க­மும் புதிய வர்த்­தக சந்­தையை நோக்­கிப் பார்­வை­யைத் திருப்பி உள்­ளது.

கோடிக்­க­ணக்­கில் முத­லீடு செய்­துள்ள திரை­ய­ரங்க உரி­மை­யா­ளர்­களும் வட்­டிக்­குப் பணம் வாங்கி பட­மெ­டுப்­ப­வர்­களும் ஊர­டங்­கால் பெரும் தவிப்­புக்கு ஆளாகி இருக்­கி­றார்­கள்.

எனவே, மின்­னி­லக்­கத் தளங்­களில் புதுப்­ப­டங்­கள் வெளி­யா­வதை இனி தடுக்க இய­லாது என திரை­யு­ல­கைச் சேர்ந்த கணி­ச­மா­னோர் வெளிப்­ப­டை­யாக கூறத் தொடங்கி உள்­ள­னர்.

தமி­ழில் அண்­மைக் காலத்­தில் இதற்­கான முதல் அடியை எடுத்து வைத்­த­வர் சூர்யா. ஜோதிகா நடித்த 'பொன்­ம­கள் வந்­தாள்' படத்தை கடும் எதிர்ப்­புக்கு மத்­தி­யில் நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யிட்­டார் அவர்.

இந்­நி­லை­யில் கீர்த்தி சுரேஷ் நடித்த 'பெண்­கு­யின்' பட­மும் இணை­யத்­தில் வெளி­யான நிலை­யில், மேலும் நான்­கைந்து படங்­கள் அவ்­வாறே வெளி­யீடு காண வரி­சை­யில் காத்­தி­ருக்­கின்­றன.

இந்­தி­யில் அமி­தாப்­பச்­சன் நடித்­துள்ள புதுப்­ப­டம், வித்­யா­பா­லன் நடித்த 'சகுந்­த­லா­தேவி', டாப்சி நடித்த 'தப்­பட்', ஊர்­வசி ரட்லா நடித்த 'வர்­ஜின் பானு­பி­ரியா' ஆகிய இந்­திப் படங்­கள் இணை­யத்­தில் நேர­டி­யாக வெளி­யீடு காண்­பது கிட்­டத்­தட்ட உறு­தி­யா­கி­விட்­ட­தா­கத் தக­வல்.

தென்­னிந்­திய மொழி­க­ளைப் பொறுத்­த­வரை, கன்­ன­டத்­தில் உரு­வான 'பிரெஞ்ச் பிரி­யாணி', மலை­யா­ளத்­தில் தயா­ரான 'சூவி­யும் சுஜாதா'வும், தெலுங்­கில் ராம்­கோ­பால் வர்மா இயக்­கி­யுள்ள 'கிளை­மாக்ஸ்' உள்­ளிட்ட படங்­கள் இணை­யத்­தில் வெளி­யா­கி­யும் வெளி­யீடு காண­வும் உள்­ளன.

"தற்­போது ஏற்­பட்­டுள்ள சூழ்­நி­லை­யில் இணை­யம் வழி படங்­களை வெளி­யி­டு­வது நிச்­ச­யம் நல்­ல­தொரு முன்­னேற்­றம்.

"இது தற்­கா­லி­க­மான ஏற்­பா­டா­கவே நடை­மு­றைக்கு வந்­தி­ருக்­கிறது. கொரோனா காலத்­திற்­குப் பிறகு திரை­ய­ரங்­கு­கள் திறக்­கப் படும்­போது நிலைமை மீண்­டும் பழை­ய­படி மாறி­வி­டும் என்­பதை திரை­ய­ரங்க உரி­மை­யா­ளர்­கள் புரிந்துகொள்ள வேண்­டும்.

"தற்­போது தவிப்­பில் உள்­ள­வர்­க­ளுக்கு ஒத்­து­ழைப்­புத் தர­வேண்­டும்," என்று நடிகை வித்யா பாலன் தெரி­வித்­துள்­ளார்.

நடிகை டாப்­சியோ ஓடி­டி­யில் படங்­கள் வெளி­யா­வது காலத்­தின் கட்­டா­யம் என்­கி­றார்.

இந்த இக்­கட்­டான கொரோனா சூழ­லில் இருந்து சிலர் தப்­பிப் பிழைக்க வழி கிடைத்­தி­ருப்­பது மகிழ்ச்சி தரு­கிறது என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

"அதே சம­யம் ரசி­கர்­கள் மத்­தி­யில் திரை­ய­ரங்­கு­க­ளுக்­கான மதிப்பு என்­றுமே குறை­யாது. திரை­ய­ரங்­குக்­குச் சென்று பார்த்­தால்­தான் புதுப்­ப­டத்­துக்­கான கொண்­டாட்ட அனு­ப­வம் கிடைக்­கும். இது அனை­வ­ருக்­கும் தெரி­யும்," என்­கி­றார் டாப்சி.

நடிகை அனுஷ்கா சர்மா கூறு­கை­யில், "இந்­தி­யா­வுக்­குள் மட்­டுமே அறி­யப்­பட்ட பல திற­மை­சா­லி­க­ளை­யும் படைப்­பா­ளி­க­ளை­யும் உலக மக்­கள் அறிந்­து­கொள்ள மின்­னி­லக்க வெளி­யீட்டு முறை உத­வி­க­ர­மாக உள்­ளது," என்­கி­றார்.

இதே­போல் மேலும் பல இயக்­கு­நர்­கள், நடி­கை­கள், இணை­யம் வழி நேர­டி­யாக படங்­களை வெளி­யிட ஆத­ரவு தெரி­வித்து வரு­கின்­ற­னர். மிக விரை­வில் மேலும் பல புதுப்­ப­டங்­கள் இணை­யத்­தில் நேரடி­யாக வெளி­யா­கக்­கூ­டும்.