சமந்தா முத்தம் கொடுத்த தோழிக்கு கொரோனா

சமந்தா முத்தம் கொடுத்த தோழிக்கு கொரோனா

1 mins read
0e2f6733-a3fc-4e0b-adec-8b6c089ae526
தனது தோழியும் பிரபல ஆடை வடிவமைப்பாளருமான ‌ஷில்பா ரெட்டியின் கன்னத்தில் முத்தமிட்ட படம் ஒன்றை தனது சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்தார் சமந்தா. இந்நிலையில் ‌‌ஷில்பா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வந்துள்ளது. படம்: ஊடகம் -

கொரோனா கிருமித் தொற்று உள்ளவரை முத்தமிட்டதால் நடிகை சமந்தாவுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதா எனும் கவலை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஷில்பா ரெட்டி சமந்தாவின் நெருங்கிய தோழியாவார். அண்மையில் இருவரும் சந்தித்துக் கொண்டபோது ஷில்பாவின் கன்னத்தில் முத்தமிட்டு தமது பாசத்தை வெளிப்படுத்தி இருந்தார் சமந்தா.

இது தொடர்பான புகைப்படத்தை அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஷில்பா ரெட்டி கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சமந்தாவுக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.