ரசிகர்களைக் கவர்ந்த ஏமி புகைப்படம்

1 mins read
6b0370fa-1863-4066-ae3d-e0dc5434f7f0
யோகாசனப் பயிற்சி செய்து தனது உடலைக் கட்டுகோப்பாக வைத்துக்கொள்கிறாராம் ஏமி ஜாக்சன். படம்: ஏமி ஜாக்சன் இன்ஸ்டகிராம் -
multi-img1 of 2

ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த பின்பும் உடற்பயிற்சி செய்வது, யோகாசனம் செய்வது எனத் தனது உடல்வாகை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் நடிகை ஏமி ஜாக்சன்.

அண்மையில் உலக யோகா தினத்தையொட்டி பல சினிமா கலைஞர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர்.

இந்நிலையில் ஏமி ஜாக்சனும் தாம் யோகாசனம் செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு சமூக வலைத்தளங்களில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

ஏமி கச்சிதமான உடல் வாகுடன் காட்சியளிப்பதாக பலரும் பாராட்டி உள்ளனர்.