'அறம்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க உள்ளதாகவும் வெளியான தகவலை இயக்குநர் கோபி நயினார் மறுத்துள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு நயன்தாரா நாயகியாக நடித்து வெளியான 'அறம்' திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது.
அதன் இரண்டாம் பாகத்தையும் கோபி நயினார்தான் இயக்குகிறார் என்று தகவல் வெளியான நிலையில் நயன்தாரா கால்ஷீட் தராமல் இழுத்தடிப்பதாகக் கூறப்பட்டது.
பின்னர் கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்ய கோபி நயினார் முடிவு செய்திருப்பதாக வெளியான தகவல் கோடம்பாக்கத்தைப் பரபரப்பில் ஆழ்த்தியது.
இந்நிலையில் 'அறம்' இரண்டாம் பாகத்தில் நயன்தாராவை தவிர வேறு எந்த ஒரு நடிகையையும் வைத்து தாம் இயக்கப் போவதில்லை என கோபி நயினார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் கீர்த்தி சுரேஷுடன் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

