நகைச்சுவைப் படமாக உருவாகிறது 'பிளான் பண்ணி பண்ணனும்'

நகைச்சுவைப் படமாக உருவாகிறது 'பிளான் பண்ணி பண்ணனும்'

1 mins read
80280402-0928-450f-addb-519f75b662b5
ரியோ, ரம்யா நம்பீசன் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் 'பிளான் பண்ணி பண்ணனும்'. -

பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ, ரம்யா நம்பீசன் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் 'பிளான் பண்ணி பண்ணனும்'. இது நகைச்சுவை நிறைந்த படமாம். "கதாநாயகன் செம்பியன் கரிகாலன் வடசென்னையைச் சேர்ந்தவன். பாசமிகு பெற்றோர், உயிர் நண்பன் என்று மகிழ்ச்சியாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கும். வடசென்னை என்றாலே ரவுடிகள் கூலிப்படை, போதை மருந்து கடத்தல் என்பதில் இருந்து விலகி தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்த்து வருவான். கதாநாயகியும் வடசென்னையில் தங்கி படித்துவரும் நிலையில் அமெரிக்கா செல்ல விரும்புகிறாள். இருவரது லட்சியமும் நிறைவேறியதா என்பதுதான் கதை," என்கிறார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்.